உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

நாமே இருக்கிறோம். எனவே, பூரித்துப் போகின்ற உரிமையும், உணர்வும் இயல்பானது நமக்கு. அந்த நமக்கு. அந்த இயல்பின் அடிப்படையில் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருக்கிறோம். இந்த மாநாட்டு வளாகத்திற்கு "பேரறிஞர் அண்ணா நகர்” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கொலை வெறியர்களால் மறைந்த என்னுடைய அருமைத் தம்பி பசும்பொன் தா.கிருட்டினன் பெயரால் பந்தல் அமைக்கப்பட்டிருக்கின்றது. தியாக மறவர்களில் ஒருவரான தம்பி பண்ருட்டி மணி பெயரால் அமைக்கப்பட்ட அரங்கத்திலேதான் நாங்களெல்லாம் அமர்ந்திருக்கிறோம். எந்த நேரத்திலும் கழகத் தலைமைக்கு பணிந்து போகிற, எதிரிகளுக்கு இடம் தராமல், கட்டுப்பாட்டை காப்பாற்றுகின்ற விருத்தாசலம் செல்வராஜ் அவர்களுடைய பெயரால் அமைக்கப்பட்டது கொடிமேடை. காலையிலே பேராசிரியர் குறிப்பிட்டதைப் போல், என்னுடைய அருமைத் தோழரும் எனக்குச் சொந்தக்காரர் என்று சொல்லிக்கொள்வதிலே பெருமை அடைபவருமான, 'அத்தான், அத்தான்' என்றே என்னை அழைத்து, இளமைப்பருவத்திலேயே நரிக்குறவர் வேடம் பூண்டு, சிதம்பரம் தெருக்களில் ஆடிப்பாடி, கொள்கை வளர்த்த தங்கம் பொன். சொக்கலிங்கத்தினுடைய பெயரால் நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது. எளியவராய், இனியவராய், ஏழைகளின் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட வானூர் முத்துவேல் பெயரால் முகப்பு. எந்தத் தியாகிகளையும், தீரர்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் மறக்கவில்லை, நன்றி மறவாத இயக்கம்