பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 75 புத்தகங்கள் வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளவாறு காமாக் கதிர்களை ஒதுக்கம் பெறச் செய்ய இயலாது; ஆல் பாக் கதிர்களைப் போலவும் பீட்டாக் கதிர்களைப் போலவும் அவற்றை முகில் அறைப்பெட்டியில் கண்ணுக்குப் புலகைச் செய்யவும் முடியாது. ஏனெனில், காமாக் கதிர்களும் காற்றில் அயனியாதலை உண்டாக்கினலும் இது நேர் முறை யில் நடைபெறும் முதல் நிலைச் செயல் அன்று; காமாக் கதிர் கள் விடுவிக்கும் எலக்ட்ரான்களால் நேரல் முறையில் (Indirect way) நடைபெறும் அயனியாதல் இது. முகில் அறையில் அவற்ருல் உண்டாக்கப்பெறும் இடைநிலைத் துகள்களின் சுவடுகளைமட்டிலுந்தான் நாம் காண முடியும்; காமாக் கதிர் களின் சுவடுகளோ நம் கண்ணுக்குப் புலளுவதில்லை. இந்த இரண்டு மெய்ம்மைகளும் ஒன்ருேடொன்று முற்றிலும் பொருந்தக்கூடியவைகளாக உள்ளன. காமாக் கதிர்களில் மின்னூட்டம் இல்லாமையே இந்த இரண்டற்கும் காரண மாகக் கொள்ளலாம். காமாக் கதிர்கள்-எக்ஸ் கதிர்கள்: வேறுபாடுகள்: உண்மையில் காமாக்கதிர்கள் எக்ஸ் கதிர்களினின்றும் (x-rays) கண்ணுக்குப் புலனுகக் கூடிய ஒளியினின்றும் வேறு படுகின்றன; காமாக்கதிர்களின் அலை நீளம் மிகக்குறைவாக இருப்பதே இவ்வேறுபாடு. அவை மின்-காந்த அலைகளில் (Elctro-magnetic waves) off Qarāāygā Gaffāgamas; oil வினத்தில் வானெலி அலைகள்தாம் மிக நீண்ட அலை நீளங் களைக் கொண்டுள்ளன. எனினும், ஏற்கெனவே குறிப்பிட் Gérar ow-goeir Qa5Goud (Wave-particle duality) @#5 எல்லா வகைக் கதிர்வீசல்களுக்கும் பொருந்தும் என்பதை நாம் அறிவோம். ஆகவே, காமாக் கதிர்களை அணுவின் உட் கருவிலிருந்து வெளி வரும் மின்-காந்த அலைகளாகச் சற்று முன்னர்க் குறிப்பிட்டிருந்தாலும், நாம் அவற்றைத் துகள்க் கூறின் அடிப்படையில் துகள்கள் என்றும், அஃதாவது அவை உட்கருவிலிருந்து வெளியே தள்ளப்பெறும் மிகவும் ஆற்றல்