பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அணுக்கரு பெளதிகம் வாய்ந்த ஒளியணுக்கள் (Photons) என்றும், அவை ஒளியின் நேர்வேகத்தில் (Velocity) இடப்பரப்பில் செல்லக் கூடியவை என்றும் கூறலாம். அணுக்கருவின் புறத்தமைப்பு : சில நிபந்தனைகளின்கீழ் அணுலின் உட்கருக்கள் காமாக் கதிர்களை வெளிவிடக் கூடும் என்ற மெய்ம்மை முற்றிலும் புரிந்துகொள்ளக் கூடியதே. வாயுநிலை மின் இறக்கத்தின் (Gaseous discharge) காரணமாக அணு கிளர்ச்சியுறுங்கால் அணுவின் உட்கருவிற்குப் புறத்தேயுள்ள அமைப்பு ஒளியை வெளிவிடக் கூடும் என்பதை ஏற்கெனவே நாம் அறிவோம். மிக வேகமான எலக்ட்ரான்களில் அணுக்களின் உள்-எலக்ட் ரான் கூடுகளிலிருந்து (Inner electron shells) துகள்கள் அகற் றப்பெறும்பொழுதும் அணுக்கள் எக்ஸ் கதிர்களைக் கூட வெளிவிடுகின்றன. இதிலிருந்து அணுக்கருவின் புறத்தமைப்பு மின்சார மண்டலத்தாலானது என்பதுவும், அத்தகைய மண் டலமொன்றில் குழப்பம் நேரிட்டால் மின்-காத்த அலைகள் வெளிவிடப் பெறுகின்றன என்பதுவும் தெளிவாகின்றன. ஆனல், அணுவின் உட்கருவும் ஒரு மின்சார மண்டலமே: இஃது அது கொண்டுள்ள மின் ஏற்றத்தால் தெரிய வருகின் றது; ஆகவே, உட்கருவினுள் நடைபெறும் சில உட்செயல் களுடன் சேர்ந்து, உட்கருவும் மின்-காந்த அலைகளை-அஃதா வது காமாக் கதிர்வீசலை-வெளிவிடும் என்று நாம் காரண காரியமுறையில் எதிர்பார்க்கலாம். இயற்கைக் கதிரியக்கத்தில் பீட்டாத் துகள்கள் எதிர் மின்ஏற்றத்தை மட்டிலும், அஃதாவது எதிர் மின்ஏற்றமுள்ள எலக்ட்ரான்களை மட்டிலும், சுமந்து செல்பவைகளாகக் காணப்பெறுகின்றன. செயற்கை முறையிலுண்டான கதிரி யக்கப் பொருள்களின் கதிர்வீசலில் நேர் மின்னூட்டமுள்ள எலக்ட்ரான்கள் கூட காணப்பெறுகின்றன என்பதை முன் கூட்டியே கூறுதல் இன்றியமையாதது; அவை எதிர்மின் 8. நேர் மின்னூட்டமுள்ள எலக்ட்ரான்கள் - Positively charged electrons.