பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அணுக்கரு பெளதிகம் உறைப்பு வாய்ந்த ஒரு காந்தப்புலம் எலக்ட்ரான்களை ஒரு பக்கமாகவும் பாசிட்ரான்களை மற்ருெரு பக்கமாகவும் ஒதுக் கித் தள்ளுவதால் அவை வளைந்த சுவடுகளை (Circular tracks) உண்டாக்குகின்றன (படம்-9). நம்முடைய ஒளிப்படத் தின் மேற்பாதியில் அத்தகைய இணை உண்டாதல் நிகழ்ந் துள்ளது; இவ்வாறு உண்டான எலக்ட்ரான், பாசிட்ரான் ஆகியவற்றின் இரண்டு சுவடுகளையும் படத்தில் தெளிவாகக் காணக் கூடும். இந்த ஒளிப்படம் மிகவும் பெரிதாக்கப்பெற் றிருப்பதால் சுவடுகளின் வழியிலுள்ள தனிப்பட்ட மேகத் துளிகளையும் காணுதல் கூடும். ஒரு சிறிது மங்கிய நிலையி லுள்ள சுவட்டை (Blurred track) உண்டாக்கிய மற்ருேர் எலக்ட்ரானும் புலளுகின்றது. ஏனைய துளிகள் யாவும் ஒரளவு மாசுற்றதன் காரணமாகக் காணப்படுகின்றன. அடிப்படைத் துகள்கள் : எனினும், இந்த இணைத் துகள்கள் உண்டாகும் நிகழ்ச்சி ஒரு ஃபோட்டான் உண்மையில் ஒர் எலக்ட்ரானலும் ஒரு பாசிட்ரானலும் ஆனது என்பதைக் காட்டுவதாகத் கருது தல் கூடாது. ஃபோட்டான் என்பது, ஓர் உண்மையான அடிப்படைத் துகள். ஆனால், அது ஏனேய துகள்களுடன் மோதும்பொழுதும் வன்மை வாய்ந்த புலங்களில் நுழையும் பொழுதும் மாறக் கூடியது. பொதுவாகக் கூறுமிடத்து, நவீன பெளதிகத்தில் அடிப்படைத் துகள்கள்' என்ற பொதுமைக்கருத்து ஒரு மாற்றத்தை அடைந்துள்ளது; இந்த அடிப்படைத் துகள்களே மிகவும் குறுகிய பொருளில்தான் இறுதியான, பிரிக்க முடியாத, சடப்பொருளின் கூறுகள்: என்று கூறலாம். ஏனெனில், பொருண்மை அழியா விதி, ஆற்றல் அழியாவிதி முதலிய விதிகளுடன் பொருந்துகின்ற வரையில் இந்த அடிப்படைத் துகள்கள் எந்தக் கட்டுப்பாடு மின்றி ஒன்று மற்ருென்ருக மாறக் கூடும் என்று மெய்ப்பிக் கப்பெற்றுள்ளது. ஆயினும், இந்த ஒரு காரணத்திற்காகவே, அவற்றுள் ஏதாவது ஒன்று ஏனேயவற்றுள் சிலவற்ருல் ஆனது என்று விளக்கியுரைப்பது பொருளற்றது.