பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 83 இத்தகைய அணுக்கரு எதிர்வினைகளை (Reations)பொருத் தமான வாய்பாடுகளால் விளக்கலாம். இங்குக் குறிப்பிட்ட எதிர்வினையின் வாய்பாடு இது : 7Nւ4 + 2He: —-> gO** +- 1斑° இத்தகைய அணுக்கரு மாற்றங்களை முகில் அறையில் காண்டல் கடும். (பிளாக்கெட்)". ஆளுல், இந் நிகழ்ச்சிகள் மிகவும் அரிதானவையாதலின், அணுக்கரு மாற்றம் அடைவ தைக் காண்பதற்கு ஏற்றவாறு இருப்பதாகப் பல்லாயிரக் கணக்கான ஒளிப்படங்கள் எடுக்கப்பெறுதல் வேண்டும். பட விளக்கம்: படம்-10-இல் வலப்புறமிருந்து இடப்புறமாகச் செல்லும் ஆல்பாத் துகள்களின் சுவடுகளைப் பேரெண்ணிக்கையில் காண்கின்ருேம். ஆனால், ஒரிடத்தில் ஒரு தனிபபட்ட மூலை விட்டச் சுவடு, வலப்புறமாகச் சாய்ந்த வண்ணம் மேல்நோக் கிச் சென்று ஆல்பாத் துகள்களின் பெருவழியைக் (Main path) குறுக்கே கடந்து செல்லுகின்றது. இன்னும் இந்த ஒளிப்படத்தை நன்கு ஆராய்ந்தால் நாம் மிகவும் தடித்த இரண்டாவது சுவடொன்றைக் காணலாம் (Detect): இது முதற் சுவடு தொடங்கும் புள்ளியிலிருந்து கிளம்பி இடப் புறத்தில் சற்றுக் கீழ்நோக்கிச் சாய்ந்து மூலை விட்டமாகச் செல்லுகின்றது. இந்தப் புள்ளியில்தான் அணுக்கரு மாற்றம் நடைபெற்றது; இஃது ஆல்பாத்துகள்களால் உண்டாயிற்று. இந்த இரண்டு சுவடுகளில் முதலாவது அணுக்கருவினின்றும் வெளியே தள்ளப்பெற்ற புரோட்டானின் பாதையாகும்; இரண்டாவது இந்தச் செயலில் வலுவான தாக்குதலைப் பெற்ற மாற்றம் அடைந்த அணுக்கருவின் பாதையாகும். புரோட்டான்கள் கிட்டத்தட்ட அணுக்கருக்களின் அடிப்படைத் துகள்கள் என்பதை இந்தச் சோதனைகள் உணர்த்துகின்றன; எல்லா அணுக்களும் ஹைட்ரஜனி 6. LorráQāl--Blackett.