பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 85 இந்தச் செயலில் பொருண்மை-எண் 1-உம் மின்னுரட்ட எண் (அணு-எண்) 0-உம் கொண்ட துகளொன்று-நியூட் ரான்-வெளியேற்றப்பட்டது. இந்தத் துகளினை நாம் n' என்ற குறியீட்டினல் வழங்குகின்ருேம்:இந்த அணுக்கரு இயக் கத்தையும் (Nuclear reaction) (இத்தகைய செயல்களுக்கு இப்பெயர் கொடுக்கப்பெற்றுள்ளது) ஏற்கெனவே ஆராய்ந்த வற்றையும் நாம் வாய்பாடுகளால் குறிப்பிடலாம். நியூட் ரானுடன் காமாக்கதிர் ஃபோட்டான் (அதன் குறியீடு ' என்பது) அடிக்கடி உண்டாவதையும் கூட நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளுகின்ருேம். ஆகவே, இப்பொழுது குறிப் பிட்ட அனுக்கருவின் இயக்கம் இவ்வாறு குறிக்கப்பெறு கின்றது : 4Be" + 2 He’ —- 6C*-i- on' + -y. இத்தகைய அணுக்கரு இயக்கத்தினுல் நிலையற்ற அணுக் கள் உண்டாதல் அடிக்கடி நிகழ்கின்றது:அஃதாவது, இயற்கை யில் கிடைக்காத கதிரியக்க அணுக்கள் உண்டாகின்றன: இவை ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குப் பிறகு சில நிலையான அணுவகைகளாக மாறுகின்றன. இதுகாறும் அறிந்தவற்றுள் இந்தச் செயல் எலக்ட்ரான்கள் அல்லது பாசிட்ரான்கள் வெளிவிடுவதுடன் மட்டிலும் நடைபெறுகின்றது. அணுக் கருக்களிலிருந்து தாமாகவோ அல்லது வெளிப்புறத் தலையீட் டிஞலோ வெளிப்படும் துகள்களின் இயல்பைப்பற்றிய நம் ஆராய்ச்சியை இந்த மெய்ம்மை முற்றுப்பெறச் செய்கின்றது. (III) அணுக்கருக்களின் அடிப்படைக் கூறுகள் அடிப்படைத் துகள்கள் : இதுகாறும் நாம் பெற்ற அறிவினைக் கொண்டு அடிப்படைத் துகள்களுள் எவற்றை அணுக்கருக்களின் இறுதியான துகள்களாகக் கருதலாம் என்ற விஞவை ஆராயப் புகலாம். இந்தத் துகள்கள் யாவை என்பதை மீண்டும் ஒரு முறை இங்கு எடுத்துரைப்போம். புரோட்டான்,