பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அணுக்கரு பெளதிகம் இடைநிலைக் கதிர்வீசலை விடுவிக்கின்றது. எனினும், 1947. இலிருந்துதான் தனிச் சிறப்பிற்குரிய இந்த நிகழ்ச்சியின் கார ணத்தைப்பற்றி ஒரளவு அறிகின்ருேம். ஃபார்புஷ்,", எஹ் மெர்ட்" என்ற இரண்டு அறிஞர்களின் உழைப்பின் பயன கவே இந்த அறிவு நமக்குக் கிடைத்தது; கதிரவனின் மேற் பரப்பில் சில குறிப்பிட்ட வெடித்தெறிதல்கள் (Eruptions) நிகழுங்கால் பூமியின்மீது படும் அண்டக் கதிர்வீசலின் உறைப்பு திடுமென அதிகரிக்கின்றது என்பதை அந்த அறி ஞர்கள் மெய்ப்பிக்க முடிந்தது. ஆகவே, விண்மீன்களின் மேற்பரப்பின் மீதும், சிறப்பாகச் செந்நிறமுள்ள பல விண் மீண்களின் மீதும் (அன்சோல்டு" என்பார் கொள்கைப்படி) அல்லது விண்மீன்களுக்கிடைப்பட்ட வெளியிலும் (Interstel: 1er Space) உள்ள பருவமுறைப்படி மாறிக் கொண்டிருக்கும் பெரிய மின்-காந்தப் புலங்களில் இந்த அண்டக் கதிர்வீசல் உண்டாகின்றது. இந்த மின்-காந்தப் புலங்கள் மிக அதிக மான தீவிர அளவுகளைப் பெற்று மின்னூட்டத்துகள்களை மிக அதிகமான நேர் வேகங்களில் முடுக்கி விடுகின்றன." முதலா வதாக ஹைட்ரஜன் அணுக்கருக்கள்தாம் இவ்வாறு முடுக்கி விடப்பெறுகின்றன; காரணம், விண்மீன்கள் பெரும்பாலும் ஹைட்ரஜனலானவை. ஆனால், இந்த விளைவு பளுவான அணுக்களின் உட்கருக்களுக்கும் நேரிடுகின்றது. ஆகவே, அவை விண்மீன்களினின்றுல் கிளம்பி அண்டவெளியின்மூலம் முதல் நிலை (Primary) அண்டக கதிர்வீசலாக விரைந்து வரு கின்றன. இந்தத் துகள்கள் புறவெளியிலிருந்து பூமியின் வளி மண்டலத்தை 10°லிருந்து 10"வரை எலக்ரான்.வோல்ட் 15. 3% strifush-Forbush. 16, எஹ்மெர்ட்-Ehmert. 17. gpsörGsrt 60G)-Unsold. 18. GuGs-(Bagge), l HuffGıdair (Biermann) stsirp அறிஞர்களின் கருத்துப்படி விண்மீன்களின் மேற்பரப்பில் ஒரு தீவிரமான புள்ளி இயக்கம் நிலவும்பொழுது இது நேரிடு கின்றது.