பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 () அணுக்கரு பெளதிகம் பொருண்மையைப்போல் கிட்டத்தட்ட தொள்ளாயிரம் மடங்கு உள்ளது. துகள்களின் மாறுந்தன்மை : அட்டவணை (c)இல் மேற்கூறப்பெற்ற எல்லா அடிப் படைத் துகள்களும், முறையே அவற்றின் பண்புகளும் அடங் கிய பட்டியல் தரப்பெற்றுள்ளது. பகுதிப்பொருள்களாகப் பிரிக்கப்பெறக் கூடிய வேதியியல் அணுக்களினின்றும் வேறு படுத்தி அறிவதற்காகவே, நாம் அவற்றை அடிப்படைத் gigoiráðr" (Elementary particles) gram aupiñ195%irGaylh; இதனுல் அவை இன்னும் மிகச் சிறிய துகள்களாலானவை அல்ல என்று பொருள்படுகின்றது. ஆனல், இஃது எந்த முறையிலும் அந்த அடிப்படைத் துகள்கள் மாற்றம் அடை யக் கூடாதவை என்பதைக் குறிப்பிடவில்லை. இதற்கு மாருக, மாற்றம் அடையக்கூடிய தன்மைதான் அடிப்படைத் துகள்களின் சிறப்பியல்பாகும். ஒரு ஃபோட்டான் ஒர் எலக்ட்ரானுகவும் பாசிட்ரானுகவும் மாறுதல் அடையக்கூடும்: இதற்கு மாமுக ஒர் எலக்ட்ரானினின்றும் ஒரு பாசிட்ரானி னின்றும் ஒரு ஃபோட்டான் தோன்றுதலும் கூடும்.ஆனால்,ஒரு ஃபோட்டான் ஓர் எலக்ட்ரானும் ஒரு பாசிட்ரானும் சேர்ந்த சேர்க்கை என்று கூறுவது தவருகும்; அல்லது அவ்வாறு கூறுவது சிறிதும் உகந்ததன்று. ஏனெனில், இதன் மாறுதலை யாக ஒர் எலக்ட்ரான் ஒரு நிலையிலிருந்து பிறிதொருநிலக்குத் தாவுங்கால், ஒரு ஃபோட்டான் ஒர் எலக்ட்ரானின் விளைவுப் பொருளாக இருத்தல் கூடும். அன்றியும், ஒரு புரோட்டான் ஒரு நியூட்ரானுகவும் ஒரு பாசிட்ரானுகவும் மாறுதல் கூடும்; அவ்வாறே ஒரு நியூட்ரான் ஒரு புரோட்டாளுகவும் ஒர் எலக்ட்ரானுகவும் மாற்றம் அடைதல் கூடும். ஆளுல், நாம் ஒரு புரோட்டான் ஒரு நியூட்ரானலும் ஒரு பாசிட்ரானலும் ஆனது என்று கூறுதல் ஒண்னது. இவை யாவும் உண்மை யான அடிப்படைத் துகள்களே; மாறுபடுந்தன்மை அவற்றின் சிறப்பியல்புகளில் ஒன்ருகக் காணப்பெறுகின்றது.