பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அணுக்கரு பெளதிகம் இது சாந்து (Mortar) போலிருந்துகொண்டு அணுக்கருவின் புறத்தமைப்பாகிய துகள்களை உட்கருவுடன் பிணைக்கின்றது என்று கூறலாம். அலைக்கூறில் கூறினல், வெளிவிடப்பெறும் ஒளி ஒரு மின்-காந்த அலையாகும்; இந்த அலையின் ஆற்றல் இந்தப் புலத்தின் ஆற்றலிலிருந்து எடுத்துக்கொள்ளப்பெறு கின்றது. அடிப்படையில், இந்தப் புலத்தை நாம் ஒருவகைப் பொருள் என்று வழங்குவதா, அன்றி வெளிப்பரப்பின் பண்பு என்று கூறுவதா என்பது ஒரு துறைச் சொற்ருெகுதிப் (Terminology) பிரச்சினையாக உள்ளது; இந்த முறையில் அணுக்கருவின் புறத்தமைப்பில் ஏற்கெனவே ஃபோட்டான் கள் ஒரு புலமாக அமைந்துள்ளன என்று கூறலாம். என்ற போதிலும், இந்த வேறுபாடு அடிப்படை முக்கியத்துவத் தைக் கொள்ள முடியாது போயினும், அணுக்கருவின் உண் மையான அடிப்படைக் கூறுகளுக்கும் அவற்றை ஒன்ருகப் பிணைத்துக் கொண்டிருக்கும் புலத்திற்குமுள்ள வேற்றுமை யைக் காண்பதற்குக் துணையாக இருக்கும். எந்த முறை யிலும், அணுக்கருவின் புறத்தமைப்பைப்பொறுத்தவரையில், எலக்ட்ரான்களை அணுக்கருவின் அடிப்படைத் துகள்களாகக் குறிப்பிடலாம் என்பதற்கும், அப்புலம் சில சமயம் ஃபோட் டான்களை உண்டாக்கும் திறனையுடையது என்று கொள்வ தற்கும் ஒரு நல்ல காரணம் உள்ளது. இந்த இரண்டுவிதத் துகள்களுக்கிடையே அடியிற்கண்ட வேறுபாட்டைக் காண லாம் : அணுக்கருவின் புறத்தமைப்பை வெளித் தலையீட் டிற்கு எப்பொது உட்படுத்தினாலும்-எடுத்துக்காட்டாக, எலக்ட்ரான்களாலோ அன்றி ஃபோட்டான்களாலோ அத அனத் தாக்குறச் செய்தல்-நேரிடும் விளைவு இதுதான்: அணுக் கருவின் புறத்தமைப்பிலுள்ள ஒரு கோள்நில்ை எலக்ட்ரான் (Planetary electron) நீக்கப்பெற்று அணுவிற்கு வெளியே சுழற்றி எறியப்பெறுகின்றது; அல்லது அணுக்கருவின் புறத் தமைப்பே கிளர்ந்த நிலைக்கு வந்து ஒரு ஃபோட்டான மட்டி லும் வெளியிட்டு முன்னைய நிலையினையே அடைகின்றது. ஆனல் தலையீடு நேரிட்ட அந்தக் கணத்திலேயே எலக்ட் ரான் வெளிவிடப்பெற்றபோதிலும்,ஃபோட்டான் உண்டாகி