பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அணுக்கரு பெளதிகம் இந்தக் கதிரியக்க அணுக்களும் ஒரு திட்டமான ஏற்புச் சிதைந்தழிதலையோ அல்லது சராசரி வாழ்வையோ கொண் டுள்ளன; இது தனிப்பட்ட பொருளுக்கேற்ப வேறுபடு கின்றது. அணுவின்புறத்தமைப்பினின்றும் ஃபோட்டான்கள் வெளிப்படுங்கால் நிகழ்வது போலவே, ஓர் எலக்ட்ரான் அல்லது பாசிட்ரான் அல்லது ஒரு நியூட்ரினேவுடன் சேர்ந்து வெளிப்படுவதற்குமுன் ஒரு நீண்ட அல்லது குறுகிய காலம் கழிந்து செல்லவேண்டும். ஆயினும், வெளித்தலையீடு ஒரு காமாக்கதிர் ஃபோட்டான வெளிப்படுத்தும் சந்தர்ப்பங் களும் உள்ளன. பொதுவாகப் பேசுமிடத்து, அணுக்கரு அசைவுகளில் அளந்தால் கால இடைவெளி நீண்டிருக்கும்: ஆனல், அது தனிப்பட்ட (Absolute)அளவில் மிகமிகக் குறுகி யிருக்கும்; அதனை வேறு எடுகோளிலிருந்து (Data) முடிவு கொள்ள வேண்டுமேயன்றி, நேர் முறையில் அளத்தல் முடி யாது. எனினும், சிலசமயம் தலையீடு நேரிடும் அதே கணத் திலேயே ஒரு காமாக்கதிர் ஃபோட்டான் வெளிப்படுவதும்

உண்டு. மேற்குறிப்பிட்ட முடிவுகளிலிருந்து (Findings) புரோட் டான்களும் நியூட்ரான்களும் அணுக்கருவின் உண்மையான அடிப்படைத் துகள்களாகக் கருதப்பெறலாம். இந்த முடிவு பிரெளட்டின் பழைய கருதுகோளுக்கு மிக நெருங்கியுள்ளது; ஒரு நியூட்ரானின் பொருண்மை ஒரு புரோட்டானின் பொருண்மையினின்றும் சிறிதும் வேறுபடுவதில்லை. அணுக்கரு-புறத்தமைப்பு ஒப்பீடு : இதுகாறும் ஆராய்ந்த கருத்துக்கள் அடியிற்கண்ட அட்டவணையில் காட்டப்பெறுகின்றன. ஒருவகையில் அணுக் கருவின் புறத்தமைப்பில் கண்ட நிலைகளும், மற்ருெரு வகை யில் அணுக்கருவிலுள்ள நிலைகளும் ஒப்பிட்டு விளக்கப்பெறு கின்றன.