பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அணுக்கரு பெளதிகம் வேண்டும். இந்தப் புலத்தின் இயல்பைப்பற்றிய சரியான அறிவுக் குறைவின் காரணமாக, முதலில் இதற்கு ஒரு பெய ரிடுவோம்; அதனை அணுக்கருப் புலம்’ (Nuclear field) என வழங்குவோம். என்ருலும், அஃதுடன் அணுக்கருக்களில் ஒரு மின்புலமும் அமைந்துள்ளது; புரோட்டான்கள் மின்னுாட் டங்களைச் சுமந்து கொண்டிருப்பதே இதற்குக் காரண மாகும். அணுக்கருவின் புறத்தமைப்பில் நேரிடும் நிலைமாற்றங் கள் மின்புலத்திலுள்ள ஆற்றலிலிருந்து உண்டாக்கப்பெறும் துகள்களின் உற்பத்தியால்-ஃபோட்டான்களால்-தொடரப் பெறுகின்றன. அணுக்கருவினை ஆராயுங்கால்,அதன் இரண்டு புலங்களிலுள்ள ஆற்றலிலிருந்து நிலைமாற்றங்களுடன் சேர்ந்து உண்டாகி வெளிவரும் துகள்களை ஒப்பிட்டுக்காணல் வேண்டும்; அவை சில சமயம்-கிளர்ந்த நிலைகளில்-தாமா கவே கழற்றிக்கொண்டு வெளிவிடப்பெறுகின்றன. மேலும், ஃபோட்டான்கள் மட்டிலுமே மின்புலத்துடன் ஒத்திருக்கக் கூடும்; உண்மையில், அணுக்கரு மாற்றங்களில் காமாக்கதிர் ஃபோட்டான்கள் அடிக்கடி வெளிவிடப்பெறுகின்றன என் பது ஏற்கெனவே ஆராயப்பெற்றுள்ளது; இந்த ஃபோட் டான்கள் மிகச் சிறிய அலைநீளத்தைக் கொண்டுள்ளன. ஆகவே, அணுக்கரு மாற்றங்களில் வெளிவிடப்பெற்ற பிற துகள்களுடன்-அஃதாவது, எலக்ட்ரான்கள், பாசிட்ரான் கள், நியூட்ரினேக்கள் ஆகியவற்றுடன்-அணுக்கருப்புலத் தைப் பொருத்திப்பார்கக வேண்டும் என்பது வெளிப்படை. அணுவின் புறத்தமைப்பிற்கும் அதன் உட்கருவிற்கும் உள்ள இந்த ஒப்பீடு (Analogy) நமக்கு உட்கருவினைப்பற்றிய எளிய தெளிவான விளக்கத்தைத் தருகின்றது. ஓர் அணுக்கரு புரோட்டான்களாலும் நியூட்ரான்களா லும் ஆக்கப்பெற்றுள்ளது. முதலாவதாக, அதன் அடிப் படைத் துகள்கள் புரோட்டான்கள் சுமந்து கொண்டிருக்கும் மின்னூட்டங்களின் விளைவாக உண்டாகும் ஒரு மின்புலத் தினுாடே ஒன்ருேடொன்று மோதிக்கொள்ளுகின்றன; இரண்