பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 & அணுக்கரு பெளதிகம் (இது மிகச் சரியாக இருக்கின்றது என்று சொல்லமுடியாது): இரண்டு துகள்களும் கிட்டத்தட்ட ஒரு பொருண்மை அல கினைப் பொருண்மையாகக் கொண்டுள்ளன. ஆயினும், புரோட்டான்களிடம் மட்டுமே மின்னூட்டம் உள்ளது: ஒவ்வொன்றும் ஓர் அடிப்படை மின்னுர்ட்டத்தைப் பெற் றுள்ளது. அணுக்கருவினைப்பற்றிய இந்த எளிய விளக்கத்திலிருந்து பொதுவாக ஒரு குறிப்பிட்ட மின்னுாட்டத்துடன் (அணுஎண்) வேறுபட்ட உட்கருப் பொருண்மை-எண்கள் தாமாவே தொடர்பு கொண்டிருத்தல் கூடும் என்ருகின்றது. அஃதாவது ஒரே வேதியியல் தனிமம் பல்வேறுபட்ட அணுக்கருக்களைக் கொண்டுள்ளது; வேறுபட்ட இந்த அணுக்கருக்கள் அத்தனி மத்தின் ஐசோடோப்புக்கள் (isotopes) என்று வழங்கப்பெறு கின்றன. அணுக்கருவின் பொருண்மை-எண் அதனுடைய புரோட் டான்கள், நியூட்ரான்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை உணர்த்துகின்றது; அஞல், அணு-எண் புரோட்டான்களின் எண்ணிக்கையைமட்டிலுமே காட்டுகின்றது. ஆகவே, நியூட்ரான்களின் எண்ணிக்கை என்பது பொருண்மை-எண் னுக்கும் அணு-எண்ணுக்கும் உள்ள வேற்றுமையே. அணு வின் இன்றியமையாத சிறப்பியல்புகளாகிய இந்த இரண்டு எண்களும் ஏற்கெனவே தனிமத்தின் வேதியியற் குறியீட்டின் மேலெண்ணுகவும் கீழெண்ணுகவும் குறிப்பிடப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, நைட்ரஜனின் குறியீடு N'; இதி லிருந்து நைட்ரஜனின் அணுக்கருவில் 7 புரோட்டான்களும் 14-7 = 7நியூட்ரான்களும் அடங்கியுள்ளன என்பதை அறி கின்ருேம். அணுக்கருவினைப்பற்றிய மேலும் சில தகவல்கள்: எ-டு ஹைட்ரஜன் : இன்னும், மிக எளிதாகவுள்ள அணுக்கருக்களைச் சற்று நுணுகி ஆராய்வோம். நியூட்ரான் என்பது, சாதாரண