பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 அணுக்கரு பெளதிகம் ஆகவும் N-Z = 0ஆகவும் இருக்கும் இடத்தில் அது காணப் பெறுகின்றது. முக்கோணங்கள் பீட்டாக்கதிர்களை வெளி விடும் அணுக்கருக்களை உணர்த்துகின்றன. முக்கோணத்தின் உச்சி மேல்நோக்கி யிருந்தால், அஃது எலக்ட்ரான்களை வெளி விடும் அணுக்கருக்களை உணர்த்தும்; உச்சி கீழ்நோக்கியிருக் கும் முக்கோணம் பாசிட்ரான்களை வெளிவிடும் அணுக்கருக் களை உணர்த்தும். எலக்ட்ரான்களை வெளிவிடும் அணுக்கருக் கள் எப்பொழுதும் எல்லாவற்றுக்கும் மேலுள்ள வரிசையில் காணப்படுகின்றன: எ.டு. He"அல்லது Li’; பாசிட்ரான்களை வெளிவிடும் அணுக்கருக்கள் பெரும்பாலானவை எல்லாவற் றுக்கும் கீழுள்ள வரிசையில் காணப்படுகின்றன: எ.டு., இC'. ஆல்பாத்துகள்களை வெளிவிடும் கதிரியக்க அணுக்கருக்கள் சிறிய சதுரங்களால் குறிப்பிடப்பெற்றுள்ளன. இறுதியாக, நிலையற்ற அணுக்கருக்களும் உள்ளன; இவை மிக உட்புற மாகவுள்ள அணுக்கருவின் புறத்தமைப்புக் கூட்டிலிருந்து ஒர் எலக்ட்ரானைச் சிறைப்படுத்திக் கொண்டு தம்முடைய அணுக் கரு மின்னூட்ட எண்ணில் ஒர் அலகு குறைத்துக் கொள்ளு கின்றன. நமது அட்டவணைகளில், இத்தகைய அணுக்கருக் கள் சிறிய வட்டங்களால் காட்டப்பெற்றுள்ளன. எலக்ட் ரான்களையும் புரோட்டான் களையும் சேர்ந்தாற்போல் வெளி விடும் அணுக்கருக்கள் ஒன்றன்மேல் ஒன்ருக, ஒரு விண்மீன் போல் பொருத்தப்பெற்றுள்ள இரண்டு முக்கோணங்களால் குறிப்பிடப்பெற்றுள்ளன. இவ்வாறு நம்முடைய அட்ட வணகள் நடைமுறையிலுள்ள எல்லா அணுக்கருக்கள், அவற்றின் அமைப்புகள், அவற்றின் பண்புகள் ஆகியவற்றை எளிய முறையில் சேர்ந்தாற்போல் உணர்த்துகின்றன. நியூட்ரான்களின் அதிகரிப்பு: சிலவகை அணுக்களில்மட்டிலும் நியூட்ரான்களின் அதி சரிப்பு அஃதாவது N-Z, எதிர் அளவாக (Negative)'இருப் 25. இதற்குக் காரணம், சில அணுக்கருக்களில் புரோட் டான்களின் எண்ணிக்கை (Z), நியூட்ரான்களின் எண்ணிக் கையை (N) விட அதிகமாக இருப்பதேயாகும்.