பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 1 0 3 பதைக் காண்கின்ருேம்; மீதியுள்ளவற்றிலெல்லாம் நேர் அளவில் (Positive)உள்ளது: அஃது எப்பொழுதும் மிகப் பெரிய அளவில் இருப்பதில்லை. இலேசான தனிமங்களின் அணுக்கருக் கள் நடைமுறையில் இறுதிவரையிலும் அவை கொண்டுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையை யொத்த நியூட்ரான் களையே கொண்டுள்ளன; பளுவான தனிமங்களில் மட்டிலும் நியூட்ரான்களின் அதிகரிப்பு ஏறக்குறைய அதிகமாகவே உள்ளது. மேலும் பல வினுக்கள் : இதுகாறும் நாம் பொதுமுறையில் தனிப்பட்ட அணுக் கருக்களின் அமைப்மை விவரமாக எடுத்துரைத்தோம்; இந்த ஆராய்ச்சி மேலும் பல விளுக்களை எழுப்புகின்றன : புரோட் டான்களும் நியூட்ரான்களும் அடங்கியுள்ள அணுக்கருவினைப் பிணைத்துக் கொண்டிருப்பது எது? இத்துகள்களை ஒன்ருகப் பிணைக்கும் விசைகளின் (Forces) இயல்பு என்ன? இலேசான அணுக்கருக்கள் கிட்டதட்ட ஒரே எண்ணிக்கை புரோட் டான்களையும் எலக்ட்ரான்களையும் கொண்டிருப்பதற்கும், பளுவான அணுக்கருக்கள் ஒரளவு சிறிது நியூட்ரான்களின் அதிகரிப்பைக் காட்டுவதற்கும்-அஃதாவது, அணுக்கருவில் மின்னுட்ட அளவுகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பிற் கேற்றவாறு நியூட்ரான்களின் அதிகரிப்பின் அளவு மிகுதியா வதற்கும்-காரணம் என்ன? ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை (Limited number) அளவு மட்டிலும் அணுக்கருக்கள் இருப்ப தேன்? இவற்றுள் பல கதிரியக்கமுள்ளவையாக இருப்பதற் குக் காரணம் என்ன? அவற்றல் வெளிவிடப்பெறும் என்று நாம் உற்று நோக்கும் அதே துகள்களையே அவ் அணுக்கருக் கள் ஏன் வெளிவிடுகின்றன? பின் வரும் சொற்பொழிவு களில் இந்தப் பிரச்சினைகளை ஆராய்வோம்.