பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் 105 energy) முதலியவை ஆகும். இவ்விதிகளின்படி இப்பொருள் கள் வெறுமையிலிருந்து படைக்கப்பெறல் முடியாது; அல்லது அழிக்கப்பெறவும் முடியாது. இங்கு முதன்மை நிலையில் முக்கியத்துவம் பெறும் விதிகள் மூன்று உள்ளன. அவை: ஆற்றல் அழியாவிதி, மின்னுாட்டம் அழியாவிதி (Law of conservation electric of chargc), Gasst som7# gC5 hij 3) pair Jogoume? § (Law of conservation of angular momentum) என்பவை. பிணைப்பாற்றலின் விவாககம : ஆற்றல் அழியாவிதியின் துணைகொண்டு நமது ஆராய்ச் சியைத் தொடங்குவோம். அணுக்கருவிலுள்ள ஒரு துகளை அகற்றுவதற்குச் சில விசைகளைப் பயன்படுத்துவது சாத்தியம் என்று கொள்வோம். (ஒர் அணுக்கருவில் புரோட்டான் களும் நியூட்ரான்களும் அடங்கியுள்ளன என்பதை நாம் அறி வோம்.) இன்னும், இந்தத் துகளைப் பிடித்து அதனை அணுக் கருவிற்கு அப்பாலுள்ள ஒர் இடத்திற்கு அகற்றிச் செல்ல வும் கூடும் என்று கொள்கையளவில் சருதலாம். அந்தத் துகள் முதலில் அணுக்கருவுடன் இறுகப் பிணைந்திருந்தால், அஃது அணுக்கருவால் நன்கு கவரப்பெற்றுள்ளது. ஆகவே, அதனைஅகற்றுவதற்கு ஒரு குறிப்பிட்டஅளவுவேலை' அல்லது வினை (Work) தேவை; அஃதாவது அணுக்கரு அமைப்பினுள் ஆற்றல் செலுத்தப்பெற்ருக வேண்டும். துகளை அகற்று வதற்கு மேற்கொண்ட இந்த வினை, அஃதாவது வருவித்த ஆற்றல், ஆற்றல் விதிகளின்படி, மேற்படி துகளே அகற்று வதில் கையாண்ட முறையினின்றும் தனித்து இயங்கலல்லது. ஆகவே, ஒவ்வொரு துகளும் அணுக்கருவினுள் ஒரு குறிப் பிட்ட அளவு ஆற்றலால் பிணைக்கப்பெற்றுள்ளது என்பது பெறப்படுகின்றதன்ருே துகளினை அகற்றுவதற்கு முன்பும், 1. ஆற்றலைச் செலுத்தி ஒரு புயனே அடைவதைப் பெளதிக இயலார் வேலை அல்லது வினை என்று குறிப்பிடுவர்.