பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 6 அணுக்கரு பெளதிகம் அதனை அகற்றிய பின்பும் அணுக்கரு அமைப்பிலுள்ள ஆற்ற வின் அளவை ஏதாவது ஒரு முறையில் அறுதியிடக் கூடு மால்ை, துகளினைப் பிணைத்துள்ள ஆற்றலின் அளவைக் கணக்கிடலாம். இனி, ஓர் அணுக்கருவின் யிணைப்பாற்றல் (Binding energy) என்ன என்பதை வரையறைப்படுத்த முயலுவோம். அணுக்கருவின் பகுதிப்பொருட்கூறுகள் ஒன்று சேர்ந்து-இவை ஒன்றற்கொன்று மிகச் சேய்மையிலி ருப்பவை-அணுக்கருவாக அமையுங்கால், அதிலுள்ள ஆற்ற வில் மாற்றம் நிகழ்கின்றது. இந்த மாற்றத்தையே அணுக் கருவின் பிணைப்பாற்றல்’ என்று வழங்குகின்றனர். இச் செயலின் எதிர்மாருன நிலையில்-அஃதாவது, அணுக்கரு வினைச் சிதைத்தலில்-ஆற்றல் செலவழிகின்றது, அஃதா வது, வெளியிலிருந்து அணுக்கருவிற்கு ஆற்றல் செலுத்தப் பெறல் வேண்டும்; அணுக்கரு அமையுங்கால் அஃது ஆற்றலை வெளிவிட வேண்டும். எனவே, அணுக்கருவின் பிணைப்பாற் றல் வரையறைப்படி, எப்பொழுதும் எதிர் அளவாகவே (Negative) இருக்கும். ஆகவே, அணுக்கரு எவ்வளவுக்கெவ் வளவு நிலைத்த தன்மையுடன் இருக்கின்றதோ அவ்வளவுக் கவ்வளவு அதனை அதன் பகுதிப்பொருட் கூறுகளாகப் (Constituent parts) பிரித்தல் கடினமாகும். இதற்குத் தேவை யான வினையின் அளவும் (அஃதாவது ஆற்றலின் அளவு) மிகவும் அதிகரிக்கும். ஆகவே, பிணைப்பாற்றலின் தனி அள வைப் (Absolute magnitude) பொறுத்து (இஃது எதிர்அளவில் உள்ளது) அணுக்கருவின் நிலைப்புத்தன்மையும் மிகும்; இதையே, சரியான கணித முறைப்படி உணர்த்தினல் பிணைப்பாற்றல் குறையக் குறைய அணுக்கருவின் நிலைப்பும் அதிகரிக்கும் என்று கூறலாம். இக்காரணத்தால்தான் ஒர் அணுக்கருவின் ஆற்றல் குறைவு அல்லது மிகுதியைக் குறிப் பிடுமிடத்து, பொதுவாக நாம் அதன் தனி அளவினையே குறிப்பிடுகின்ருேம். இந்த முறையில் நோக்கிளுல், பிணைப் பாற்றலின் மிகுதிக்கேற்ப அதன் நிலைப்புத் தன்மையும் மிகும் என்பது தெரிகின்றது.