பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 அணுக்கரு பெளதிகம் ஆற்றலை அளத்தல் : ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும் ஒன்று சேர்ந்து ஒரு ட்யூடெரான் உண்டாகுங்கால் வெளிவிடும் ஆற்றல் எவ் வளவு என்பதைக் கூறிளுேம். உண்மையில், இந்த நிகழ்ச் சியை உண்டாக்கி அதில் வெளிவரும் ஆற்றலே நாம் அளக்க முடியும். நியூட்ரான்களே உண்டாக்க வல்ல மூலம் இதற்குத் தேவை. நவீன செய்முறை பெளதிகத்தில் இத்தகைய மூலங் களை எளிதில் அடையலாம். நியூட்ரான்கள் உண்டாக்கப் பெறுங்கால் அவை மிக அதிகமான நேர்வேகத்தில் இயங்கும் என்பதை நாம் அறிவோம். அவற்றின் வேகத்தைத் தணித்து, கிட்டத்தட்ட அவற்றை இயங்காநிலைக்குக் கொண்டு வருதல் வேண்டும். அப்பொழுதுதான் அவை இயங்காநிலையிலுள்ள ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைய முடியும. எனவே, நாம் நியூட்ரான்களை ஹைட்ரஜன் உள்ள ஏதாவது ஒரு பொருளின் ஊடே பாயும்படி செய்கின்ருேம். இதனுல் நியூட்ரான்கள் மிகப்பல ஹைட்ரஜன் அணுக்களுடன் மோதுகின்றன; அவ் வாறுநேரிடும் மோதுதல்களின் (Collisions) விளைவாக அவை படிப்படியாக, இயக்க ஆற்றலின் பெரும் பகுதியை இழக் கின்றன. சிறிதளவு இயக்க ஆற்றல் இழக்கப்பெருமல் நின்று போகின்றது; இந்த அளவு குறிப்பிட்ட அந்தப் பொருளின் வெப்ப நிலையைப் பொறுத்தது. இறுதியாக, அவை வெப்ப நேர்வேகம் எனப்படும் வேகத்துடன் முடிவு நிலையை எய்து கின்றன. இந்நிலையில் அவை புரோட்டான்களுடன் இணையும் படி செய்யப்பெறுகின்றன. இந்தச் செயலில் ட்யூடெரானின் பிணைப்பாற்றல் விடு விக்கப்பெறுகின்றது. ஆற்றல் அழியாவிதிக்கிணங்க இவ் வாற்றல் எங்காவது நிலைபெற்றிருத்தல் வேண்டும்; அஃதா வது, அவ்வாற்றல் ஏதாவது ஒரு வடிவத்தில் எங்காவது சென்ருக வேண்டும். காரணகாரியமுறைப்படிக் கருதிஞல், அது மின்-காந்தக் கதிர்வீசல் வடிவத்தில் வெளியேறுகின்றது என்று கொள்ளலாம்: அஃதாவது, மிகக் குறைந்த அலைநீளத்தையுடைய காமாக் கதிர்வீசலாகப் போகின்றது.