பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் 1 I 3 லில் (Spring) ஆற்றல் தேக்கப்பெறுகின்றது. ஆனல், இதில் தேங்கின் ஆற்றலின் அளவு மிகவும் குறைவு; ஆகவே, இதனை மெய்ப்பித்துக் காட்ட இயலாது. கடிகாரத்தின் பொருண மையுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து E/c" என்ற பொருண் மையின் அளவு மிகக் குறைவாகும். ஆனால், ஆற்றலுக்கும் பொருண்மைக்கும் உள்ள இந்த உறவு முறையை அணுக்கரு பெளதிகத்தில் செய்முறைப் பய ளுக்கலாம் (Practical use). அணுக்கருப் பொருண்மைகளு டன் ஒப்பிடுமிடத்து, அவற்றில் தேங்கிக் கிடக்கும் ஆற்றல் கணிசமான அளவுடையதாகும். இந்த உறவு முறையை E = mc என்ற சமன்பாடாக அமைத்துக் கொண்டு ஓர் அமைப்பின் m என்ற பொருண்மையிலிருந்து E என்ற ஆற் றலைக் கணக்கிட முடிகின்றது. ஒளியின் நேர் வேகம் நாம் அறிந்தது; அது கிட்டத்தட்ட விடிைக்கு 300,000 கிலோ மீட்டர் ஆகும்; அஃதாவது, விடிைக்கு 3 x 10" சென்டி மீட்டர் ஆகும். மேற்கூறிய கடிகாரத்திற்குச் சாவி தரும் எடுத்துக்காட்டிலிருந்து பெறும் ஆற்றல்களின் அளவுகள் அணுக்கருக்களின் ஆற்றல் அளவுகளுக்கு முற்றிலும் வேறுபாடானவை. அணுக்கருக்களின் பிணைப்பாற்றல்கள் மிகக் குறைவு என்பது உண்மைதான்; அங்ங்ணமே அவற்றின் பொருண்மைகளும் மிகக் குறைவே. எனவே, m = Elc என்ற சமன்பாட்டில் m என்ற பொருண்மையின் அளவு, அணுக்கருப் பொருண்மைகளே நோக்க, தள்ளுபடி செய்யக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதன்று. ஆகவே, ஆற்றல் அளவின் மாற்றத்திற்கேற்ப அணுக்கருவில் நிகழக்கூடிய ஏதாவது மாற்றத்தைச் சரியான அளவில் அளந்து காணல் கூடும். மேற்கூறிய வாய்பாட்டை அணுக்கருக்களில் பிர யோகம் செய்தால், அது காட்டும் முக்கிய உறவு முறையை உறுதிப்படுத்துகின்றது. அ-8