பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நில்கள் 11 7 புலங்களின் வழியாகச் செல்லும்படி செய்யப்பெறுகின்றன. அங்கு அவை ஒதுக்கப்பெறுகின்றன. இவ்வொதுக்கங்களின் அளவு அணுக்களின் மின்னூட்டத்திற்கும் (e) அவற்றின் பொருண்மைக்கும் (m) உரிய விகிதத்தையும் அவற்றின் நேர் வேகத்தையும் பொறுத்திருக்கும் என்பதை நாம் ஏற்கெனவே கண்டறிந்துள்ளோம். ஒரு குறிப்பிட்ட நேர் வேகத்தைக் கொண்ட துகள்கள் மட்டிலும் பிரிந்து செல்லுமாறு பொருண்மை நிறமாலை வரைவான் அமைக்கப்பெற்றுள்ளது: அவை அவ்வாறு செல்லும்பொழுது உற்று நோக்கப்பெறும் பொருள்களாகின்றன. அப்பொது e/m என்ற விகிதம் அறுதி யிடப்பெறுகின்றது; துகள்கள்களின் மின்னுரட்டம் e-யை நாம் அறிவோமாதலின், அதன் பொருண்மை m-ஐக் கணக் கிட்டுவிடலாம்; அல்லது, இன்னும் சரியாக இருக்க வேண்டு மாயின் துகள்களின் பொருண்மை m-ஐ ஆக்ஸிஜன் ஐசோ டோப்பின் (80') பொருண்மையுடன் ஒப்பிடலாம்; வரை யறைப்படி இதன் பொருண்மை சரியாக 16,000 அ.பொ.அ. பிணைப்பாற்றல்களைக் கணக்கிடுவதற்கு ஹைட்ரஜன் அணு வின் சரியான பொருண்மையும் நியூட்ரானின் சரியான பொருண்மையும் நமக்குத் தெரியவேண்டும். ஹைட்ரஜன் அணுவின் பொருண்மை 1.00813 அ.பொ. அ; நீயூட்ரானின் பொருண்மை 1.00895 அ. பொ. அ. பொருண்மையில் மாற்றம்: இனி, ஒரு ட்யூடெரிய அணு (Deuterium atom) உண்டா குங்கால் பொருண்மையில் நேரிடும் மாற்றங்களை அளவறி முறையில் (Quantitatively)பரிசீலனை செய்வோம். இந்த அணு உண்டாவதற்கு முன்பு, ஒரு தனிப்பட்ட ஹைட்ரஜன் அணு வும் (H), ஒரு தனிப்பட்ட நியூட்ரானும் (on) இருந்தன. அவை இரண்டும் ஒன்று சேர்ந்த பிறகு, ஒரு ட்யூடெரிய அணுவும் (ID) விடுதலை நிலையிலுள்ள ஒரு ஃபோட்டானும் (hr) உள்ளன. இந்த முடிவினை அடியிற்காணும் வாய்பாட் டால் குறிப்பிடலாம். i H* + on” –> 1 Do + hv