பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 & அணுக்கரு பெளதிகம் ட்யூடெரிய அணுவின் பொருண்மை 2.0.147 அ. பொ. அ; ஆனல் ஹைட்ரஜன் அணுவின் பொருண்மையும் நியூட் ராணின்பொருண்மையும் சேர்ந்து 1.00813 - 1,000895 = 2.0171. அ, பொ. அ. தான் ஆகின்றது. ட்யூடெரிய அணு வின் பொருண்மை அவற்றின் பகுதிப் பொருள் கூறுகளின் பொருண்மைகளின் கூட்டுத் தொகையைவிட உண்மையில் குறைவாகவே உள்ளது. இதுதான் பொருண்மைக் குறை என்பது; இதன் அளவு 0.0024 அ. பொ. அ. (2.4.அ. பொ. அ.-9) ஆகும்.ஆனல், ஆற்றல் அளவைகளால் உணர்த்திளுல் இந்தப் பொருண்மைக் குறை கிட்டத்தட்ட 2.2 Mew பிணைப் பாற்றலைக் குறிப்பிடுகின்றது: இந்த ஆற்றல்தான் அணுவிலி ருந்து ஒரு ஃபோட்டான் வடிவில் விடுவிக்கப்பெறும் ஆற்ற லாகும் என்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். எனவே, பிணைப்பாற்றலைக் கணக்கிடுவதில் ஒன்றற்கொன்றுதொடர்பு இல்லாத இரண்டுமுறைகள் உள்ளன என்றும், அந்த இரண்டு முறைகளும் ஒரே விடையைத்தான் தருகின்றன என்றும், ஆகவே பொருண்மையும் ஆற்றலும் ஒன்றற்கொன்று சம மாக உள்ளன என்பதற்கு இவை சிறந்த சான்றுகளாக அமைகின்றன என்றும் அறிகின்ருேம். இது மிகவும் சிறப் பானதோர் உண்மையாகும். ஏனெனில், நான் மின்சாரப் புலங்களைத் தொடர்பு படுத்தி இவ்விதியைப் பேசவில்லை. சார்ப்புக் கொள்கை கண்டறியப்பெறுவதற்கு முன்னதாகவே இவ்விதி மின்புலத்திற்குப் பொருந்தும் என்பது யாவரும் அறிந்ததே. ஆளுல், முற்றிலும் வேறுபட்ட பிற புலங்களுக்கு இவ்வுண்மை பொருந்தும் என்பது அப்பொழுது கண்டறியப் பெறவில்லை. அணு-எடைகளைப்பற்றிய ஓர் உண்மை: - சற்று முன்னர் ஆராய்ந்த முடிகவுள் ஏற்கெனவே பிரெளட்" என்பார் ஊகித்திருந்தது போலவே, தனிமங்களின் அணு-எடைகள் ஏன் ஒர் அடிப்படை அலகின் முழு மடங்கி களாக (Integral multiple)இருக்கவில்லை என்பதையும் காட்டு கின்றன. முதலாவதாக, புரோட்டானின் பொருண்மையும் 8. பிரெளட் . Prout