பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 அணுக்கரு பெளதிகம் தளவு கூட வினையின்றி ஒர் அணுக்கருவினைச் சிதைத்தல்கூடும் என்ற நிலை இருக்குமாயின், அணுக்கரு நிலைப்புடன் இருத்தல் முடியாது. ஆகவே, நாம் பிற அழியாவிதிகளையும் (Conser, vation laws) நம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ள வ்ேண் டும். மின்னூட்டம் அழியாவிதியின்படி ஓர் அமைப்பிலுள்ள மின்னூட்டம் முழுவதையும் மாற்றக்கூடிய அளவுக்கு அணு எவ்வித மாற்றத்தையும் அடைய முடியாது. ஆகவே, அணுக் கருவில் புரோட்டான் நியூட்ராகை மாறுதலோ, அல்லது நியூட்ரான் புரோட்டானுக மாறுதலோ, சிறிதும் ஈடு செய் யய்பெருமல் நடைபெறமுடியாது. இல்லையேல், உண்மை யில் நிலைப்புடன் இருப்பதாகக் கருதப்பெறும் அணுக்கள் நிலைப்புடன் இல்லை என்ருகிவிடும். எடுத்துக்காட்டாக, போரன் அணுக்கருவின் பொருண்மை-எண் 12 (இது மிகச்சரி யன்று): கார்பன் அணுக்கருவின் பொருண்மை-எண்ணும் 12 தான். போரன் அணுக்கருவில் 7 நியூட்ரான்களும் 5 புரோட் டான்களும் உள்ளன; ஆளுல், கார்பன் அணுக்கருவில் 6. புரோட்டான்களும் 6 நியூட்ரான்களும்தான் உள்ளன. அவற்றின் குறியீடுகள் முறையே B', C ஆகும். எனினும். போரன் அணுக்கருவின் பொருண்மை, கார்பன் அணுக்கரு வின் பொருண்மையை விடச் சிறிதளவு அதிகமாகவுள்ளது. இரண்டற்கும் உள்ள வேற்றுமை 0.013 அ பொ. அ. ஆகும். ஆகவே, இரண்டன் பிணைப்பாற்றல்களிலும் உள்ள வேற் றுமை கிட்டத்தட்ட 12 Mew ஆகும். போரன் அணுக் கருவைவிட கார்பன் அணுக்கரு அதிகப் பொருண்மைக் குறைவைப் பெற்றிருப்பதால், கார்பன் அணுக்கருவின் பகு திப் பொருட் கூறுகள் போரன் அணுக்கருவின் பகுதிப் பொருட் கூறுகளைவிட மிக அதிகமாக இறுகப் பிணைந்துள் ளன. ஆகவே, போரன் அணுக்கரு நிலைப்புடன் இல்லை என்றும், அது தானகவே கார்பன் அணுக்கருவாக மாறு கின்றது என்றும் நாம் கொள்ளலாம். இம்மாற்றம் 12 Mew அளவுவரை உள்ள ஆற்றலை விடுவிக்கின்றது ஆல்ை,போரன் அணுக்கருவிலிள்ள ஒரு நியூட்ரான் ஒரு புரோட்டாளுக மாறும்பொழுதுதான் இச்செயல் நடைபெறுதல்கூடும். எனி