பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 3 அணுக்கரு பெளதிகம் நடை பெறுங்கால், ஓர் எலக்ட்ரான் வெளிவிடப்பெறுதல் வேண்டும்; இந்த எலக்ட்ரானும் h/2 அளவு கோணத்திருப்பு திறனேக் (மின்னியல் தற்சுழற்சியைக்) கொண்டிருக்கும். ஆகவே, எஞ்சிய கார்பன் அணுக்கரு ஒரு கோணத் திருப்பு திறனேத் தன்னிடம் நிலேயாக வைத்துக் கொண்டி ருக்கும்; அதன் மதிப்பு h/2-இன் ஒர் ஒற்றைப்படை எண் மடங்கியாக (Multiple) இருக்கும். இதில் பங்கு கொண்ட கோணத் திருப்புதிறன்கள் ஒன்றற்கொன்று சமமாகச் செய்து கொள்ளா. ஆளுல், இந்த இடர்ப்பாடான நிலையில் நாம் ஒன்றை நினைவுகூர்தல் வேண்டும்; இயற்கையான பீட்டாக் கதிர்வீசல்பற்றி ஆராய்ந்தபொழுது இதே மாதிரி ஆற்றல் களேச் சமப்படுத்தும் சங்கடங்களைக் கண்டோம்; அவற்ருல் நியூட்ரிளுே என்ற ஒரு வகை மின்துகளின் இருப்பிற்கு வழி காட்டியதையும், இந்த நியூட்டிரினே எலக்ட்ரான்-வெளிப் படும்பொழுதே உமிழப்பெறுகின்றது என்பதையும் அறிந் தோம். இந்த நியூட்ரினேதான் கோணத் திருப்பு திறன் அழியாவிதிக்குக் காரணமாகின்றது என்பது வெளிப்படை. போரன் அணுக்கருவிளுல் வெளிவிடப்பெறும் எலக்ட்ரான் கள் தொடர்ந்தாற் போன்று வரிசையாகவுள்ள ஆற்றல்களை வெளிவிடுகின்றன; எலக்ட்ரானுடன் நியூட்ரிளுேவும் ஒரே சமயத்தில் வெளிவிடப்பெறுகின்றது என்று கருத இந்த மெய்ம்மை இடந்தருகின்றது. போரன் அணுக்கரு உண்மை யாகவே நிலைப்புடன் இல்க் என்பதும்,அஃது ஒர்எலக்ட்ரான யும் நியூட்ரானையும் வெளிவிடுவதன்மூலம் கார்பன் அணுக் கருவாக மாறுகின்றது என்பதும் நமக்கு இள்ளுெரு முடி வினைக் காட்டுகின்றன; அதன்படி நியூட்ரிகுே எலக்ட்ரானின் கோணத் திருப்பு திறகள ஈடு செய்யும் நிலையில் அதற்கு h/2 என்ற அளவுள்ள கோணத்திருப்பு திறன் உண்டு. ஒரு பொதுவான முடிவு : இப்பொழுது நாம் அணுக்கருவின் நிலைப்பின்னயொட்டி மூன்று அழியாவிதிகளினின்றும் அடையக் கூடிய ஒரு பொது