பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 26 அணுக்கரு பெளதிகம் அணுக்கருவை திரவத்துளியுடன் ஒப்பிடல்: ஆகவே, நாம் அணுக்கருவினை ஒரு திரவத் துளியுடன் ஒப்பிட்டு மிகச்சரியான அதன் ஒரு மாதிரி உருவத்தை அடை கின்ருேம். நீரின் மூலக்கூறுகளிலிருந்து பல்வேறு அளவு நீர்த்துளிகள் உண்டாதல்போலவே, புரோட்டான்களி லிருந்தும் நியூட்ரான்களிலிருந்தும் பல்வேறு பருமனுள்ள அணுக்கருப்பொருளின் துளிகள்-பல்வேறு அணுக்கருக்கள்உண்டாதல் கூடும். ஓர் அணுக்கருவினுள் காணக்கூடிய அதே பண்புகளையே இந்தத் திரவத்துளிகளின் மாதிரி உருவத்தி லும் காணலாம். ஏனெனில், ஒரு துளி முழுவதும் மூலக் கூறுகள் ஒரே மாதிரியாக வினியோகிக்கப்பெற்ற செறிவுடன் அடைக்கப்பெற்றுள்ளன; அந்த மூலக்கூறுகள் யாவும் ஒரே அளவுள்ள ஆற்றலால் பிணைக்கப்பெற்றுள்ளன. அனைத் துலகப் பொதுவான, ஒருபடித்தான அணுக்கருப்பொருளின் இருப்பைப்பற்றிய நம் அறிவு அணுக்கருவின் அமைப்மைப் புரிந்து கொள்வதற்குத் துணைசெய்கின்றது. புறப்பரப்பு இழுவிசை: ஆனல், இந்தத் திரவத்துளி இன்னும் சில நுட்பமான சிறப்புப் பண்புகளையும் பெற்றுள்ளது; இப்பண்புகள் அணுக் கருவிலும் ஒற்றுமையுடையனவாக அமைந்துள்ளனவா ஏன் பதை நாம் ஆராயவேண்டும். உண்மையில், ஒரு திரவத் துளியில், எல்லா மூலக்கூறுகளும் ஒரே அளவு இறுக்கத்துடன் பிணைக்கப்பெறவில்லை. துளியின் மேற்பரப்பிலுள்ள மூலக் கூறுகள் ஏனையவற்றுடன் ஒரு பக்கத்தில் மட்டிலுந்தான் பிணைந்துள்ளன. ஆகவே, அவை ஏனையவற்றைவிட, சற்றுக் குறைவான இழக்கத்துடன்தான் பிணைந்திருக்கின்றன. இந்த உண்மை புறப்பரப்பு இழுவிசை (Surface tension) என்ற நிகழ்ச்சியை விளக்குகின்றது. ஏற்கெனவே அணுக்கருக்களில் பிரயோகம் செய்த முடிவுகளைப் போன்ற ஆற்றல்பற்றிய ஒரு சில முடிவுகளே துளிகள் கோள வடிவாக அமைவதற்குப்