பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அணுக்கரு பெf இகம் அணுக்கருவின் விசைகளிலிருந்தே இந்த ஆற்றலின் பெரு ம் பகுதி கிடைக்கின்றது. இந்த ஆற்றல் புறப்பரப்பு இழுவிசை யால் திரிபடைகின்றது (Modied) இறுதியாக, மொத்த ஆற்றலின் ஒரு பகுதி மின்னுற்றலின் விலக்கு விசையிலிருந்து தொடங்குகின்றது. வி. வெய்ஸ்ரிக்கர்' என்பார் மேற் கொண்ட ஆராய்ச்சின் அடிப்படையில் நாம் இந்த மூன்று உறுப்புக்களையும் தனித்தனியாக ஆராய்ந்து அவற்றைப் புரோட்டான்களின் எண்ணிக்கையுடனும் நியூட்ரான்களின் எண்ணிக்கையுடனும் பொருத்துவோம். * உட்கருவின் விசைகள்: அணுக்கருவின் விசைகளிலிருந்து தொடங்குவோம். இந்த விசைகளே புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் பிணைப்பவை: அன்றியும் அணுக்கருக்கள் எலக்ட்ரான்களையும் பாசிட்ரான்களையும் வெளியிடவல்லவை என்ற ‘மெய்ம்மை யிலும் இன்வ தொடர்பு கொண்டுன்ளன என்பதையும் முன்னர்க் கண்டோம். இந்த நிகழ்ச்சி புரோட்டான்களுக் கும் நியூட்ரான்களுக்கும் இடையே இருப்பதுபோலவே முற் நிலும் சமச் சீருள்ளதாக (Symmetrical) உள்ளது என்பது தெளிவு. ஒரு நியூட்ரான் புரோட்டானக மாறக்கூடும்: இந்த மாற்றத்தில் ஒர் எலக்ட்ரான்வெளிவிடப்பெறுகின்றது. இதற்கு மறுதலையாக, ஒரு புரோட்டான் ஒரு நியூட்ரானுக மாறவும் கூடும்; இவ்வாறு நிகழுங்கால் ஒரு பாசிட்ரான் உடன் விளைவுப்-பொருளாகும். இதல்ை அணுக்கருவிலுள்ள விசைகளை அல்லது அணுக்கருப்புலத்தைப் (Nuclear field) பொறுத்தவரையிலும் புரோட்டான்களுக்கும் நியூட்ரான் களுக்கும் யாதொரு வேற்றுமையும் இல்லை என்ற முடிவினை மெய்ப்பிக்கின்றது. ஆகவே, அணுக்கரு விசையினல் ஏற் படும் பிணைப்பாற்றலின் பகுதியை, நியூட்ரான்களின் எண் வணிக்கையும் புரோட்டான்களின் எண்ணிக்கையும் கொண்ட 10. «6. Galileorásf-V. Weizsacker.