பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 30 அணுக்கரு பெளதிகம் உறுப்புடன் நிறுத்திக் கொண்டால், நாம் மேலே காட்டிய தைப்போன்ற சமன்பாட்டைப் பெறலாம். நாம் எடுத்துக் கொள்ளும் அணுக்கருக்களில் N-ம் 2-ம் ஒன்றற்கொன்று அதிகம் வேறுபடாதிருப்பதால் நமக்கு இந்த அண்ணளவீடு (தோராய மதிப்பு) போதுமானது. இந்தச் சமன்பாட்டின் முதல் உறுப்பு எதிர் அளவாக (Negative) உள்ளது. பிணைப்பாற்றலைப் பொறுத்தமட்டிலும் அஃது அப்படித்தான் இருக்கவேண்டும். ஆயினும், மிகச்சிறிய மதிப்பைக் கொண்ட இரண்டாம் உறுப்பு நேர் அளவாக (Positive) உள்ளது. ஆகவே, அஃது எதிர் அளவிலுள்ள பிணைப்பாற்றலின் தனித்த அளவைச் சிறிது குறைத்து விடு கின்றது. N.உம் Z-உம் ஒன்றக்கொன்று எண்ணிக்கையில் வேறுபடுங்கால் பிணைப்பாற்றலின் அளவு குறைகின்றது. ஆகவே, ஆற்றல் சிக்கனத்தைப் பொறுத்தமட்டிலும், ஒர் அணுக்கரு புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் சம மான எண்ணிக்கையில் பெற்றிருக்கும்பொழுதுதான் வசதி யான சூழ்நிலை ஏற்படுவதாகத் தோன்றுகின்றது. புறப்பரப்பு இழுவிசையால் குறையும் ஆற்றல்: ஆணுல், இங்கு நாம் புறப்பரப்பின் இழுவிசையைப் பொறுத்துள்ள திருத்தம் ஒன்றனைக் குறிப்பிட்டாகவேண்டும். ஒரு துளியின் மேற்பரப்பிலுள்ள துகள்கள் உள்ளிருக்கும் துகள்களைக் காட்டிலும் குறைவான இறுக்கத்துடன் பிணைக் கப்பெற்றுள்ளன; இந்நிலை மேற்குறிப்பிட்ட சமன்பாட்டின் வலப்புறத்தில் இன்னும் ஒரு நேர் அளவுள்ள உறுப்பினைச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. ஏனெனில், -A என்ற முதல்நிலை உறுப்பு எதிர் அளவாக இருப்பதால், சமன்பாட்டின் இப்பக்கம் கட்டாயம் எதிர் அளவாகத்தான் இருக்கவேண்டும்; அதன் மதிப்பைக் குறைப்பதற்கு ஏதாவது ஒரு நேர் அளவினைச் சேர்க்கவேண்டும். புறப்பரப்பு இழு விசையின் காரணமாகப் பிணைப்பாற்றலின் அளவில் ஏற் படும் மாற்றம் புறப்பரப்பிலுள்ள துகள்களின் எண்ணிக்கை