பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் 131 யுடன் தகவுப் பொருத்தத்திலுள்ளது; ஆகவே, அது புறப் பரப்பிற்கும் தகவுப் பொருத்தமாகின்றது. ஆனால், புறப் பரப்பு அணுக்கருவின் பருமனளவின் 2/3-வது அடுக்கிற்கு (அல்லது துகள்களின் மொத்த எண்ணிக்கையின் 2/3-வது அடுக்கிற்குத்) தகவுப் பொருத்தத்தில் அமைந்துள்ளது. ஆகவே, பிணைப்பாற்றலின் இப்பகுதியை Eo = C (N-Z) 2/3 என்ற சமன்பாட்டால் குறிப்பிடலாம். இதை (N - Z) ஆல் வகுத்தால் ஒவ்வொரு துகளிற்கும் உள்ள சிறு பகுதி ஆற்றல் கிடைக்கும். இதனை அடியிற்கண்ட சமன்பாட்டால் குறிப்பிடலாம்: E O - soz = c(N +z இங்கு C என்பது ஒரு மாறிலி. மின் விலக்கு விசையின் விளைவு: இறுதியாக, புரோட்டான்களிடையே நேரிடும் மின்விலக்கு விசையின் விளைவைக் குறிப்பதற்கு வலப்புறத்தில் மற்ருேர் உறுப்பினைச் சேர்க்கவேண்டும். இப்பொழுது நாம் நமக்குப் பழக்கமாகவுள்ள மின்சார நிலையியலின் (Electrostatics) எல்லைக்கு வருகின்ருேம். ஓர் அணுக்கரு விலுள்ள மின்னூட்டம் Ze என்ற குறியீட்டால் குறிக்கப் பெறும்; e என்பது அடிப்படை குவாண்டம் மின்சாரத்தைக் குறிக்கின்றது. ஒரு மின்தங்கியிலுள்ள (Condenser) ஆற்றல் அதிலுள்ள மின்னூட்டத்தின் மடக்கு எண்ணுக்குத்(Square) தகவுப் பொருத்தமாக இருப்பது போலவே, ஓர் அணுக்கரு விலுள்ள மின்னற்றலும் அதன் மின்னூட்டத்தின் மடக் கெண்ணிற்கு, அஃதாவது Ze-க்கு, தகவுப் பொருத்தமுடைய தாகும்.மேலும், அஃது அணுக்கருவின் ஆரத்திற்கு(Radius)த் தலைகீழ்த் தகவுப் பொருத்தத்திலுள்ளது. மற்றும், ஓர் எண் காரணியையும் கருதவேண்டியுள்ளது; ஒருபடித்தான மின்னூட்டம் பெற்ற கோளத்திற்கு இக்காரணி 3/5 ஆகும். மின்னூட்டம் மேற்பரப்பை நோக்கிச் சிறிது இடம் பெயர்க்