அணுக்கருக்களிள் இயல்பான நில்ைகள் 1 37 உரியதாக இருப்பதால் நமது சமன்பாடு ஒரு புறப்பரப்பைத் தருகின்றது. அணுக்கருவின் நிலப்பினை அறுதியிடுவதற்கு வேண்டிய எல்லாத் தகவல்களையும் ஆற்றலின் புறப்பரப்பின் வடிவத்திலிருந்தே பெறலாம். படம்-12, படவடிவத்தில் இந்தப் புறப்பரப்பைக் காட்டுகின்றது; இதிலுள்ள சமஉயரக் கோடுகள் (Contour lines)பிணைப்பாற்றலின் சம அளவுகளைக் காட்டுகின்றன. இதில் மேற்கொண்ட ஆற்றலின் அலகு 0.001 அ. பொ. அ. ஆகும். பிணைப்பாற்றல்கள் எதிர் அள வாக இருப்பதால், புறப்பரப்பு ஓவிய தளத்திற்குக் கீழாக அமைகின்றது. இது படத்தின் இடது கீழ்மூலையிலிருந்து வலது மேல்மூலையை நோக்கிச் சிறிது சிறிதாகச் சரிந்து வரும் பள்ளத்தாக்கைப் போலவே உள்ளது; இதையே பட ஒப்பு மையைப் பயன்படுத்தித் தென் மேற்கிலிருந்து வடகிழக்கை நோக்கி விழும் பள்ளத்தாக்கைப்போல் (Walley) உள்ளது என்றும் வேறு விதமாகக் கூறலாம். சிறிது வளைவுள்ள தெரு வில் வீடுகள் இருப்பதுபோல் நிலைப்பு அணுக்கருக்கள் இந்தப் பள்ளத்தாக்கின் அடிமட்டத்தில் அமைகின்றன. ஒரே எண் ணிக்கைத் துகள்களைக் கொண்ட அணுக்கருக்கள் எப்பொழு தும் வடமேற்கிலிருந்து தென்கிழக்கில் 45'-குக் குறைவாக உள்ள ஒரு கோணத்தின் நேர்க் கோடுகளிலேயே அமையும். இந்த அணுக்கருக்களுள் அடிமட்டத்தின் மிக அண்மை யிலுள்ள அணுக்கரு மிக அதிகமான நிலைப்புடையது. அழியா விதிகளை யொட்டி (Conservation laws) மிகக் குறைந்த நிலைப் புடனிருக்கும் அணுக்கருக்களில் ஒன்று எப்பொழுதும் மிக அதிகமான நிலைப்புடைய அணுக்கருவாக மாறிக்கொண்டே இருக்கும். பள்ளத்தாக்கின் தரை மட்டத்தில் இடப்புறமாக அமைந்துள்ள அணுக்கருக்களில் மிக அதிகமான நியூட்ரான் கள் உள்ளன. ஆகவே, அவை ஒர் எலக்ட்ரானை விடுவித்துக் கொண்டு மாற்றம் அடைய வேண்டும். ஆளுல், வலப்புற மாக அமைந்துள்ள அணுக்கருக்களில் மிக அதிகமான புரோட்டான்கள் உள்ளன. ஆகவே, அவை ஒரு பாசிட்ரானே விடுவித்துக்கொண்டு மாற்றம் அடைய வேண்டும். எனினும், நாம் இவ்வாறு நடைபெரு நிலையைத்தான் காண்கின்ருேம்;
பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/162
Appearance