பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 4 g. அணுக்கரு பெளதிகம். னுள்ள அணுக்கருக்களுடன் அடிக்கடி கலந்து காணப்படு கின்ற மெய்ம்மை, மிகவும் கவனத்திற்கு வரும் ஒரு கூறு ஆகும். இந் நிலைக்குரிய காரணங்கள் பின்னர் ஆராயப் பெறும். சில அணுக்கருக்கள் அவற்றின் புற அமைப்பில் மிக உட்புறமாகவுள்ள எலக்ட்ரான் கூட்டிலிருந்து (K-கூடு) ஒர் எலக்ட்ரானேச் சிறைப்படுத்திக் கொண்டு மாற்றம் அடை கின்றன. இந்த அணுக்கருக்கள் K-பற்றிகள்’ (K.Capturers) என்று சொல்லப்பெறுகின்றன. அவை நம் அட்டவணைகளில் வட்டங்களாகக் காட்டப்பெற்றுள்ளன. பெரும்பாலும் அட்டவணையின் கோடியில், பல சதுரங்களையும் காண்கின் ருேம்; அவை ஆல்பாக் கதிர்களே வெளிவிடும் அணுக்கருக் களை உணர்த்துகின்றன. ஆல்பாக் கதிர்களை வெளிவிடும் அணுக்கருக்கள்: இதுகாறும், எலக்ட்ரான்களையோ பாசிட்ரான்களையோ வெளிவிட்டு மாற்றத்தை அடையும் உறவுடன் கூடிய அணுக் கருவின் நிலைப்புத் தன்மையைப்பற்றி ஆராய்ந்தோம். இனி, ஆல்பாக் கதிர்களை வெளிவிட்டு அவை மாற்றம் அடையும் உறவுடன் கூடிய அணுக்கருவின் நிலைப்புத்தன்மையைப் பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம். படம்-11ஐ ஆராய்ந்து ੋਂ இன் மதிப்பு, தொடக்கத்தில் குறைந்தும் பிறகு அதிகரித்தும் இருப்பதிலிருந்து, 2 + N = 40 என்று இருக் கும் வரையில் அணுக்கருவின் நிலைப்புத்தன்மை நிதானமாக அதிகரிக்கும் என்றும், அதன் பிறகு சிறிது சிறிதாகக் குறை யும் என்றும், இதற்குக் காரணம் மின்சார விலக்கு விசையே என்றும் நாம் சில முடிவுகட்கு வருதல் கூடும். ஆயினும், இந்நிலைகளில்கூட, அணுக்கருவிலிருந்து தனிப்பட்ட ஒரு துகளை அகற்றுவதற்கு வினை" (Work) ஆற்றப்பெறுதல் வேண்டும். இவ்வாறு வினையைச் செலுத்தி இரண்டு நியூட் ரான்களையும் இரண்டு புரோட்டான்களையும் சேர்ந்தாற். போல் அணுக்கருவிலிருந்து அகற்றி, அதன்பிறகு அவற்றை ஒரு ஹீலிய அணுக்கருவாகச் சேர்ப்பதாகக் கருதுவோம்