பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் 141 இந்தச் செயலில் ஆற்றல் மிகப் பெரிய அளவில், அஃதாவது 30 Mew, விடுவிக்கப்பெறுகின்றது. இந்த ஆற்றல் தனிந் தனியே நான்கு துகள்களை அகற்றுவதற்குத் தேவையான ஆற்றலைவிட அதிகமாக இருந்தால், ஆற்றலில் ஆதாயம் உள்ளது என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். ஆகவே, ஆற்றலியலின் (Energetics) நோக்கத்தைப் பொறுத்தமட்டி லும், இந்தச் செயல் பயனுடையதாகின்றது; அன்றியும். இச்செயலால் அணுக்கருவில் ஒர் ஆல்பாத் துகளின் தோற்ற மும், அதன் பிறகு அதனை அணுக்கரு வெளிவிடுதலும் தான கவே நடைபெற்றுக்கொண்டிருக்க வேண்டும். துகள்களின் எண்ணிக்கை அதிகரித்தற்கேற்றவாறு இச்செயல் நடை பெறக்கூடிய ஏற்புடைமையும் அதிகரிக்கவேண்டும் என்பது உறுதியாகின்றது. காரணம், துகள்களின் எண்ணிக்கை அதிகரித்தற்கேற்றவாறு ஒவ்வொரு துகள்களின் பிணைப்பாற் றல் குறைகின்றது. ஆகவே, அனுபவத்தையொட்டி, ஆல் பாக் கதிர்களை வெளிவிடும் அணுக்கருக்கள் பளுவான அணுக் கருக்களினிடையேதான் இருத்தல் வேண்டும் என்ருகின்றது. உண்மையில், மிகப் பளுவான அணுக்கருக்களே அணுகும் பொழுது ஒரு துகளின் பிணைப்பாற்றலின் அளவும் கிட்டத் தட்ட, 8 லிருந்து 7 Mew வரை, குறைந்து கொண்டு செல் வதை அறியலாம்; அஃதாவது, இது ஹீலிய அணுக்கருவின் பிணைப்பாற்றலில் நான்கில் ஒரு பங்கு உள்ளது. அணுக்கரு பிளவுறுதல்: துகள்களின் மொத்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பொழுது, ஆற்றலியலைப்பொறுத்தவரை அணுக்கருவைக் கிட்டத்தட்ட ஒரே அளவுள்ள இரண்டு கூறுகளாகப் பிரிப்ப தில் ஆதாயம் உள்ளது. பொருண்மை-எண் 230-ஐக் கொண்ட ஓர் அணுக்கரு, பொருண்மை எண் 100-உம் பொருண்மை-எண் 180 உம் கொண்ட இரண்டு அணுக்கருக் களாகப் பிரியலாம். ஏனெனில், இந்த இரண்டு அணுக்கருக் களின் பிணைப்பாற்றலின் மொத்த அளவு பொருண்மை.