பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அணுக்கரு பெளதிகம் எண் 230-ஐக் கொண்ட ஒரு தனி அணுக்கருவின் பிணைப்பாற் றலின் அளவைவிட அதிகமாக உள்ளது. இவ்வாறு அணுக் கருக்களைப் பிரிக்கும் நிகழ்ச்சிகள்- பிளவுறுதல் (Fission) -1938-இல் ஹான்,' ஸ்ட்ராஸ்மன்' என்ற இரண்டு அறிஞர் களால் உண்மையாகவே உற்றுநோக்கப்பெற்றன. உண்மையில் ஒவ்வொரு பளுவான தனிமமும் ஏன் ஆல் பாக் கதிர்களை வெளிவிடுவதில்லை என்றும், அல்லது அனுப வத்தையொட்டி குறிப்பிடத்தக்க அளவு நீண்ட காலம் வரை ஒன்ருக இணைந்திருப்பதற்குப்பதிலாக இஃது ஏன் கிட்டத்தட் டச் சம அளவுள்ள இரண்டு அணுக்கருக்களாகப் பிரி கின்றது என்றும் நாம் வியப்புறுதல் கூடும். பிளவுறுதலைப் பொறுத்தமட்டிலும், இந்தத் தனிமங்களின் ஆயுட் காலங் கள் (Lifetimes) மிக அதிகமாகவே உள்ளன. இந்த விைைவ ஆருவது சொற்பொழிவில் ஆராய்வோம். 15, optraig-Hahn. I6. simulgirovLoair-Strassmann.