பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அணுக்கரு பெளதிகம் இடையே ஓர் அடிப்படை உறவு நிலவுகின்றது என்று கூற லாம். (எ-டு): மாறிக்கொண்டிருக்கும் மின் விசைகள் (Forces) சதா காந்த விசைகளை உற்பத்தி செய்கின்றன; அங்ஙனமே மாறிக்கொண்டிருக்கும் காந்த விசைகளும் மின் விசைகளை உற்பத்தி செய்கின்றன. மேலும், சிறப்பான இயல்பைக் கொண்டதாகக் கருதப்பெறும் ஒளிபற்றிய நிகழ்ச்சிகள் இந்த மின்-காந்த நிகழ்ச்சிகளுள் அடங்கியவை என்றும், அவை யாவும் மின்-காந்த அலைகளேயன்றி வேறு அன்று என்றும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.சிலசோதனை களில் ஒளி ஒர் அலேபோல் காணப்பெருமல் பறந்து செல்லும் துகள்களாக, அஃதாவது ஃபோட்டான்களாகக் காணப் பெறுகின்றது என்பது அடுத்தபடியாகக் கவனிகக வேண்டிய தொன்று; எனவே, நாம் மின்-காந்தப் புலத்திற்கும் இந்த ஃபோட்டான்களுக்கும் ஓர் உறவு முறையைக் கண்டு பிடிக்க வேண்டும். எனினும், கணிதச் சமன்பாடுகளின் துணை கொண்டு மின்-காந்த விசைகனைப்பற்றிய விரிவான விவரங் களைத் தருதல் கூடும்; அந்தச் சமன்பாடுகள் காந்த விசைகள் எவ்வாறு மாறுகின்றன, எவ்வாறு பரவுகின்றன என்பதை உணர்த்தும்.இந்த நிகழ்ச்சிகளின் இயல்பு பற்றிய முழு விளக் கம் குவாண்டம் கொள்கைபற்றிய சமன்பாடுகளுடன்சேர்ந்த மாக்ஸ்வெல்லின் சமன்பாடுகளிலிருந்தே பெறலாம். ஆனல், அணுக்கரு விசைகளைப்பொறுத்தவரையிலும் அச்சமன்பாடுகளை இன்னும் நாம் பெறவில்லை. எனினும், அவற்றின் விளக்கத்தைப்பற்றி ஒரளவு கருதலாம்; இக் கருத்து பண்பறி முறையில்(Qualitatively)ஓரளவு சரியாகவே இருக்கும். இக்கருத்து, மின்காந்த ஆலைகள் எத்தனை விவரங் களைப் பெற்றிருக்கின்றனவோ அத்தனை விவரகளையும் அடக் கிக் கொண்டிருக்கின்றது. என்ருலும், இதற்குச்சரியான கணித வாய்பாடுகள்தாம் இல்லை. I. uprégivolajä-Maxwell