பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 அணுக்கரு பெளதிகம் காந்த ஆற்றலாக-வெளி விடப்பெறுகின்றது என்பதை ஏற் கெனவே நாம் எடுத்துக்காட்டியுள்ளோம்.இதிலிருந்து ஒரு வடி விலுள்ள ஆற்றல் பிறிதொரு வடிவத்திற்கு மாற்றவல்லஅஃதாவது, அணுக்கருப் புலத்திலுள்ள மின்-காந்தமல்லாத ஆற்றல் கதர்வீசலின் மின்-காந்த ஆற்றலாக மாற்றப்படும்செயலொன்று நடைபெற்றுக்கொண்டுள்ளதுது என்பதுதெளி வாகின்றது.ஆகவே, பொதுவாக எல்லா வகை ஆற்றல்களைப் போலவே, அணுக்கருப்புலத்தின் ஆற்றலும் ஆற்றலின் பிற வடிவங்களாக மாற்றப்படும் திறனைப் பெற்றுள்ளது என்பது பெறப்படுகின்றது. நியூட்ரான்கள்: பறந்து செல்லும் நியூட்ரான்கள் ஒரு புரோட்டானின் அருகே செல்லும்பொழுது நேரிடும் ஒதுக்கத்தைக் கவனித்து அணுக்கரு விசைகள் துரத்தைப்பொறுத்துள்ளன என்பதைப் பற்றி ஒரளவு நுட்பமாக அறியலாம் (படம்-14.). நவீன பெளதிகத்தில் நியூட்ரான்களின் மூலங்களுக்குக் குறைவில்லை. வேண்டுவதெல்லாம் நியூட்ரான்களை ஹைட்ரஜனைக்கொண்ட ஒரு பொருளின்மூலம்-(எ-டு) பாரபின் மெழுகு போன்ற ஒரு ஹைட்ரோ-கார்பன் அல்லது நீர்-செலுத்தி அவற்றைத் தம்முடைய நேர் வழிகளினின்றும் ஒதுக்கமடையச் செய்ய வேண்டுவதே. ஒரு நியூட்ரானின் ஒதுக்கத்தின் அளவு இயல் பாக புரோட்டானிடமிருந்து அது செல்லும் பாதையின் தாரத்தைப் பொறுத்தது. பெரும்பாலும் இந்தத் தூரம் அதிகமாகவே இருக்கும். நியூட்ரான்கள் ஒரு புரோட்டா னின் அருகே செல்லும் சந்தர்ப்பங்கள் மிகவும் அருகியே (Rare) காணப்படும். தூரம் அதிகமாக இருந்த போதிலும் தாரத்திற்கேற்றவாறு விசைகளின் அளவு மெதுவாகக் குறைந் தால்-எடுத்துக்காட்டாக, மின்னூட்டங்களிலுள்ளதுபோல் -நியூட்ரான்கள் ஒரு சிறிதாகிலும் ஒதுக்கப்பெறுதல் கூடும். மிக அதிக எண்ணிக்கையில் நியூட்ரான்கள் ஒதுக்கப்பெறுதலை உண்மையில் காணலாம்; ஆல்ை, ஒதுக்கங்களின் அளவு எப்