பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் 147 பொழுதும் மிகக் குறைவாகவே இருக்கும். உண்மையில், அதிக ஒதுக்கங்கள் அருகி யை காணப்பெறும். இதற்கு மாருக, துரத்திற்கேற்றவாறு விசை மிக அதிக வேகத்தில் குறைந் தால் பெரும்பாலான நியூட்ரான்கள் ஒதுக்கம் அடைவதே இல்லை. ஒதுக்கம் பெற்ற நியூட்ரான்களில்-புரோட்டானுக்கு மிகவும் நெருங்கிச்செல்லும் ஒரு சில மட்டிலும்-சிறிய ஒதுக் கங்களும் பெரிய ஒதுக்கங்களும் ஆகிய இரண்டு வகையுமே ஒரே அளவில் நடைபெறுவதை அறியலாம். மின்-கவர்ச்சி, மின்-விலக்கு விசைகளிலிருப்பதைவிட, நியூட்ரானுக்கும் புரோட்டானுக்கும் இடையேயுள்ள விசை தூரத்திற்கேற்றவாறு விரைவாகக் குறைகின்றது என்பதை இத்தகைய சோதனைகள் எடுத்துக்காட்டியுள்ளன. அளவீடு களின் திருத்தத் தரம் (Degree of accuracy) இன்னும் தூர விதியைச் சரியான முறையில் முறைப்படுத்திகூறுவதற்கேற்ற வாறு அமையவில்லை. எனினும், 5 x 10- செ. மீ. தூரத் தில் இந்த விசை ஏற்கெனவே மிகச் சிறிதாகிக் கொண்டிருக் கின்றது என்று நாம் கூறலாம். இதல்ை புரோட்டானுக்கும் நியூட்ரானுக்கும் இடையிலுள்ள விசை மிக மிகக் குறைந்த வீச்சினைப் (Range) பெற்றுள்ளது என்ருகின்றது; இந்தக் கூறில் மின்விசையினின்றும் இது வேறுபடுகின்றது. நியூட்ரானின் நிலையாற்றலின் அடிப்படையில் ஆர்ாய்ச்சி: விசையை ஆராய்வதற்குப் பதிலாக, ஒரு நியூட்ரான் ஒரு புரோட்டானின் புலத்திற்குள் பெற்றிருக்கும் நிலையாற் றலையொட்டி (அல்லது ஒரு புரோட்டான் ஒரு நியூட்ரானின் புலத்திற்குள் பெற்றிருக்கும் நிவேயாற்றலே யொட்டி) நம் முடைய ஆராய்ச்சியை அமைக்கலாம். தூரம் மிக அதிகமாக இருக்கும் பொழுது, நாம் இந்த ஆற்றலின் அளவை நம் விருப் பப்படி 0 என்று குறிப்பிடுவோம். குறிப்பிட்ட தூரங்களில் அஃது எதிர் அளவினைப்(Negative magnitude) பெற்றுள்ளது.