பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் 1 5 I விசை மட்டிலும் அணுக்கருவின் அண்மைப் பிணைவை (Nuclear cohesion) sēsitéSa15HStb, søGO Fuir Fëa யில் அணுக்கருப் பொருள் கிட்டத்தட்டச் சம எண் ணிைக்கையுள்ள புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் கொண்டுள்ளது என்பதை விளக்குவதற்கும் போது மானது. ஏனெனில், புரோட்டான்களுக்கும் நியூட்ரான் களுக்கும் இடையில் மட்டிலும் ஏதாவது ஒரு விசை செயற்பட்டால், முதலில் சமச்சீர் ஏற்கெனவே உறுதிப்படுத் தப்பெறும். ஆனல், புரோட்டான்கள் புரோட்டான்களால் ஒதுக்கம் அடைதல்பற்றிய அனுபவம் ஒரே வித துகள்களுக் கிடையில் கவர்ச்சி விசைகள் செயற்படுகின்றன என்பதை மெய்ப்பிக்கின்றது; அஃதாவது, இந்த விசைகள் புரோட் டான்களிடையே மட்டுமன்றி நியூட்ரான்களிடையேயும் செயற்படுகின்றன; இந்தக் கவர்ச்சி விசைகள் புரோட்டான் களுக்கும் நியூட்ரான்களுக்கும் இடையேயுள்ள கவர்ச்சி விசைகளுக்குக் கிட்டத்தட்டச் சமமாக உள்ளன. இரண்டு புரோட்டான்கள் உள்ளபொழுது நிலைமை மிகவும் சிக்கலாக வுள்ளது. ஏனெனில், மின்சார விலக்கு விசை அணுக்கருவின் கவர்ச்சி விசையின்மீது பொருத்தப்பெறுகின்றது. ஆளுல், மிகக் குறைந்த தூரங்களைப் பொறுத்தவரையில், அணுக்கரு விசையைவிட விலக்கு விசை மிகவும் பலமற்று இருக்கின்றது. ஆகவே, இதில் நடைமுறையில் உட்கரு விசைதான் செயற் படுகின்றது. எனினும், மின்விசை தன்னுடைய நீண்ட வீச்சின் (Long range) காரணமாக அணுக்கரு விசையின் இயக்கம் நின்று நீண்ட நேரத்திற்குப் பிறகும் தொடர்ந்து காணப்பெறுகின்றது. ஒரு புரோட்டான் மற்ருெரு புரோட் டானிடமிருந்து பல்வேறு தூரங்களில் இருக்கும்பொழுது அதன் நிலையாற்றலின் விளக்கப் படம் (Diagram) ஒன்று வரைந்தால், அது கிட்டத்தட்ட படம்-16 ஐப் போன்று காணப்பெறும், உண்மையில், 5x10 -19 செ. மீ. தூரம் வரையில், அந்தப் படம் முற்றிலும் படம் 15 துடன் பொருந் துவதாக உள்ளது. எனினும், அந்த நிலையிலிருந்து, நிலை யாற்றல் அஸிம்டோட்டாக 0-யத்தை அணுகுவதில்லை;