பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் 159 கருவியினைக்கொண்டு செய்யப்பெற்றது(படம்-37).பேராற்ற லைக்கொண்ட நியூட்ரான்கள் முகில் அறையில் புரோட்டான் களைக் எதிர்த்து வீசி எறியப்பெறுகின்றன. மோதலுக்குப் பிறகு முகில் அறையில் புரோட்டான்களின் சுவடுகள் கண் ணுக்குப் புலகிைன்றன. ஒரு சாதாரண விசையாக இருந் தால் மிக அதிகமான நியூட்ரான்கள் மிகக் குறைந்த அளவு ஒதுக்கம் பெறுவதை எதிர்பார்க்கலாம். ஆனல், புரோட் டான்கள் முன்பு இருந்ததைவிட குறைந்த வேகத்துடன் நியூட்ரானின் பாதைக்கு 90°-இல் வீசி எறியப்பெறும். பெரும்பாலான மோதல்களில், நியூட்ரான் கிட்டத்தட்ட 9 -இல் ஒரு பக்கமாக வீசிஎறியப்பெறும்பொழுது, எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கும் நியூட்ரான்களின் சுவடுகள் வழியாகப புரோட்டான்கள் (நியூட்ரான்கள் உண்மையில் புரோட்டான்களாக மாற்றப்பெற்றுவிட்டதால்)தொடர்ந்து செல்ல வேண்டும். இதைத்தான் நாம் உண்மையில் முகில் அறையில் சரியாகக் காண்கின்ருேம். படம்-17 (A) புரோட் டான்களின் சுவடுகளைக் காட்டுகின்றது; அவற்றுள் பெரும் பாலானவை கிட்டத்தட்ட ஒரு நேர்ப்பாதையில் எதிர் நோக்கி வந்துகொண்டிருக்கும் நியூட்ரான்கள் செல்லும் திசையில் பறந்து செல்லுகின்றன. அவற்றின் ஆற்றலுக் கேற்றவாறு அவற்றின் சுவடுகளை ஒரு காந்தப்புலம் ஏறக் குறைய பலமான வளைவரைகளாக (Strongly curved) ஆக்கு கின்றது (45%க்குக் குறைந்த அளவில் சாய்ந்திருக்கும் நேர்க் கேர்டுகள் முகில் அறையில் ஒரு மெல்லிய கம்பியாலான வலைக்கண் சல்லடையால் உண்டாக்கப்பெறுகின்றன). எனினும், இந்நிலை நாம் காட்டியவாறு முற்றிலும் அவ் வளவு எளிதானதன்று. அணுக்கரு விசை, மின் விசை இவற் றின் ஒப்புடைமைநாம்கருதுகின்றவாறு இருப்பின், ஒர்அணுக் கருவின் புறத்தமைப்பில் ஒரு ஃபோட்டான் வெளியாகும் நிகழ்ச்சியினை அறுதியிடுவதற்கு மேற்கொள்ளும் முறையினைப் போன்ற ஒரு முறையில் நாம் பீட்டாச் சிதைவு நிகழ்ச்சியினை யும் காணலாம். ஒர் அணுக்கருவின் புறத்தமைப்பு கிளர்ந்த