பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 அணுக்கரு பெளதிகம் (III) அணுக்கரு விசைகளின் நிறைவு வலுவெண் விசைகள்: மேற்கறப்பெற்ற ஒப்புடைமை வலுவெண் (Walency) விசைகளுடன் ஒரு முடிவினைக் குறிப்பிடுகின்றது; இம்முடி வினை இங்கு நாம் மெய்ப்பிக்க இயாலாவிடினும், அதனே ஒரளவு நம்பக்கூடியதாகச் செய்யலாம். வலு வெண் விசைக் கும் மின்விசைக்கும் உள்ள ஒரு முக்கிய வேற்றுமை-பலவற் முள்ளும்-யாதெனில், வலுவெண் விசை நிறைவுபெறத் (saturation) தக்கதாக உள்ளது. வேதியியல் அறிஞர் ஒவ் வொரு அணுவின் குறியீட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக் கையுள்ள வலுவெண்களேத் தருகின்ருர், அந்த எண்ணிக்கை அந்தத் தனிமத்தின் வலுவெண்ணுடன் பொருந்துகின்றது. நிறைவுபெற்ற ஒருவேதியியல் கூட்டுப்பொருளின் ஒவ்வொரு 21solorou airlin irritosyth (Structural formula) 35.56m*u. வலுவெண் பிடிகள் (கொக்கிகள்) அணுவின் குறியீட்டில் தொடங்கி மற்ருெரு அணுவின் குறியீட்டில் முடிவுபெறும் கோடுகளால் குறிப்பிடப்பெறுகின்றன. இந்த இரண்டாவது அணுக்குறியீட்டிலிருந்து அதன் வலுவெண்ணின் எண்ணிக் கையத்தனைக் கோடுகள் தொடங்குகின்றன. எடுத்துக்காட் டாக, கரியமிலவாயு (C=C= 0) என்பது நான்கு வலு வெண்னேக் கொண்ட கரி அணுவும் இரண்டுவலுவெண்ணேக் கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களும் (Oxygen atoms) சேர்ந்த கூட்டுப்பொருளாகும். இதில் சிறப்பான கூறு யாதெனில், ஒர் அணுவின் வலுவெண் கோடுகள் யாவும் மேற்கொள்ளப்பெற்று விடுவதால், அந்த அணு நிறைவு பெற்றதாகிவிடுகின்றது. அஃதாவது,அஃது அதனுடைய வலு வெண்ணை முற்றிலுல் பயன்படுத்தி விடுகின்றது. எனவே, எடுத்துக்காட்டாக நீரின் மூலக்கூறில் (H-0-H,) ஆக்ஸிஜ னின் இரண்டு வலுவெண்களும் ஹைட்ரஜன் அணுக்களால் நிறைவு செய்யப்பெறுகின்றன; இதற்குமேல் ஹைட்ரஜன்