பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் I 65 அணுக்கள் சேர முடியாது. ஏறக்குறைய சாதாரணமான 0H, வகை மூலக்கூறே இல்லை, நியூட்ரானின் வலுவெண்: இவ்வாறே அணுக்கரு விசைகள் அல்லது அவற்றின் பெரும்பகுதி முற்றிலும் இம்மாதிரியான நிறைவுபெறும் பண்பைப் பெற்றுள்ளன. ஒரு நியூட்ரான் இரண்-ற்கு மேற் படாத புரோட்டான்களுடன் பிணைதல் கூடும்; ஒரு புரோட் டான் இரண்டற்கு மேற்படாத நியூட்ரான்களுடன்பிணைதல் கூடும். இந்த மெய்ம்மையை வலுவெண் கோடுகளின் வடி வில் உணர்த்த விரும்பிளுல் புரோட்டான் இரண்டு கோடு களுடன் எழுதப்பெறுதல் வேண்டும்; இக்கோடுகள் நியூட் ரான்களை மட்டிலும் சேர்க்கக்கூடும்; இங்ங்னமே, ஒரு நியூட் ரானுக்கு இரண்டு வலுவெண் கோடுகள் உள்ளன: அவை புரோட்டான்களை மட்டிலும் சேர்க்கக்கூடும். ஏதாவது இரண்டு புரோட்டான்களிடையே, அல்லது இரண்டு நியூட் ரான்களிடையே செயற்படும் விசைகளே நாம் தள்ளுபடி செய்வதால், இது முற்றிலும் சரி என்று சொல்ல முடியாது. ஆயினும், இக்கூற்று உண்மை நிலைகளின் பூர்வாங்க விளக்கம் தருகின்றது. ஏற்கெனவே ஆராய்ந்தவாறு, அணுக்கருக் களின் தனிப்பட்ட அடிப்படைக் கூறுகளின் பிணைப்பாற் நல் அணுக்கருவின் பருமனைப் பொறுத்தன்று என்பதற்கு அணுக்கரு விசைகளின் நிறைவு பெறும் இப்பண்பு விளக்கந் தருகின்றது. ஒரு துகள் ஒர் அணுக்கருவில் அடங்கிவிட்டால் முற்றிலும் மின்விசைகளைப்போலன்றி அஃது அணுக்கரு விசை களின் மிகச் சிறிய வீச்சின் காரணமாகத் தன்னுடைய மிக அருகிலுள்ள துகள்களுடன் மட்டிலுந்தான் மோதுகின்றன: இரண்டாவதாக, விசைகளின் நிறைவின் காரணமாக, இந்தத் துகள்களும் தனக்கு மிக நெருங்கியுள்ள இரண்டு துகள்களுடன் மட்டிலுந்தான் பிணைந்து கொள்ள முடிகின் றது. அணுக்கருப் பொருளுக்கும் ஒரு திரவத்திற்கும்இடையே யுள்ள ஒப்புடைமைக்கு இது மேலும் காரணத்துடன் கூடிய