பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 66 அணுக்கரு பெளதிகம் விளக்கமாக அமைகின்றது. ஏனெனில், ஒரு திரவத்திலுள்ள அணுக்கள் நெருங்கிப் பிணைவுறுவதற்கும் இத்தகைய விசை களின் பண்புகள் பொறுப்பாக இருத்தல் காரணமாக, ஒரு திரவத்திலுள்ள அணுக்களுக்கும் இதே விளக்கம் அடிப்படை யில் பொருந்துகின்றது. (IV) அணுக்கருக்களின் நிலைப்புடைமை ஒரு முக்கியமான முடிவு: மேற்கூறிய யாவும் ஒரு முக்கியமான முடிவினைக் காட்டு கின்றன: அஃதாவது, 2 என்ற எண்-பொதுவாக, இரட் டைப்படை எண்கள்-அணுக்கருக்களில் ஒரு சாதகமான இடத்தைப் பெறவேண்டும். ஆகவே, நாம் எந்த அணுக்கருக் களில் புரோட்டான்களின் எண்ணிக்கையும் நியூட்ரான்களின் எண்ணிக்கையும் இரட்டைப்படை எண்களாக இருக்கின் றனவோ, அவைதாம் குறிப்பாக நிலைப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில், ஒவ்வொரு புரோட் டானும் இரண்டு நியூட்ரான்களுடன் இணைவதாலும், இதற்கு மறுதலையாக, ஒவ்வொரு நியூட்ரானும் இரண்டு புரோட்டான்களுடன் இணைவதாலும், இதில்-இதில் மட்டி லும்-எல்லா வலுவெண்களும் பயன்படுத்தப்பெறக் கூடும். ஆற்றலியலைப் (Energetics)பொறுத்தவரையில், ஓர் ஒற்ன்றப் படை புரோட்டான் அல்லது நியூட்ரான் வலுவெண்ணேப் பயன்படுத்தாததைவிட இந்நிலை இயல்பாகவே மிகவும் பயனுள்ளதாகவுள்ளது. பாலின் நீக்க விதி: ஆல்ை, 2 என்ற எண்ணின் சாதகமான இடத்திற்கு மற். ருெரு காரணமும் உண்டு; அஃதாவது, அணுக்கருவின் புறத் தமைப்பைப்பற்றி நாம் ஆராய்ந்தபொழுது குறிப்பிட்ட