பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் I67 பாலின் நீக்கவிதியே" அது. பொதுவாகக் கூறினால், ஓர் அமைதியான நிலையில் ஏதாவது ஒரு சமயத்தில் ஒரே ஒரு துகளிற்கு மட்டிலுந்தான் இடம் உண்டு என்று இந்த விதி வற்புறுத்துகின்றது. ஒர் எலக்ட்ரானின் தற்சுழற்சி நேர் அளவாகவோ அல்லது எதிர் அளவாகவோ-வலஞ்சுழி யாகவோ அல்லது இடஞ்சுழியாகவோ-இருக்கலாம் என்ற மெய்ம்மையைக் கருத்திற்கொண்டு இதை அடியிற்கண்ட வாறு உரைக்கலாம்: இரண்டற்கு மேற்படாத எலக்ட் ரான்கள் (எதிரான தற்சுழற்சிகளைக் கொண்டவை) அணுக் கருவின் புறத்தமைப்பிலுள்ள நிலையான அதே அயனப் பாதையில் இடம்பெற முடியாது. இதேவிதி அணுக் கருக்களின் துகள்களாகிய புரோட்டான்களுக்கும் நியூட்ரான் களுக்கும் .ெ பா ரு ந் து ம்: அணுக்கருக்களும் இம் மாதிரியே ஒரு தற்சுழற்சி தி ரு ப் பு தி ற னை உடை யவை. ஆகவே, ஓர் அணுக்கருவில் இரண்டற்கு மேற்படாத நியூட்ரான்களோ அல்லது இரண்டற்கு மேற்படாத புரோட் டான்களோ அதே நிலையான பாதையில் இடம்பெற முடி யாது என்பதாகின்றது. ஆற்றலியலைப் பொறுத்தவரையில் இவ்வாறு இடங்கொடுக்கப்பெற்ற வாய்ப்பினை முழுவதும் பயன்படுத்துதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரட் டைப்படை எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களையும் இரட் டைப் படை எண்ணிக்கையுள்ள புரோட்டான்களையும் கொண்ட அணுக்கருக்களுக்கு இந்த மெய்ம்மை மீண்டும் ஒரு சர்தகமான நிலையினை விளைவிக்கின்றது. 6. Lita'sir fláà oð-Pauli's exclusion principle. 7. அணுக்கருவின் புறத்தமைப்பைப்பொறுத்தவரையில் அமைதியான நிலை என்பது, ஒரு குறிப்பிட்ட திட்டமான அயனப் பாதை, அல்லது இதனை அலைக்கூறில் கூறினால், ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னியல் தற்சுழற்சியின் (Electronic spin) ஒரு குறிப்பிட்ட மாருத அதிர்வு.