பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 அணுக்கரு பெளதிகம் டும். எனினும், ஆற்றலியலைப் பொறுத்தவரையில் இது சாத்தியப்படாது: ஏனெனில், இதற்கு ஆற்றல் செலவழிதல் வேண்டும். இதன் மறுதலையாக, N-Z = 10 ஆகவுள்ள Nb அணுக்கரு ஒர் எலக்ட்ரானே வெளிவிட்டு N-2 = 3 ஆக வுள்ள Mo அணுக்கருவாகவோ, அல்லது ஒரு பாசிட்ரான வெளிவிட்டு N-Z =12 ஆகவுள்ள மிகவும் அதிகமான நிலைப் புடைமையைக் கொண்ட Z அணுக்கருவாகவோ மாறுதல் மிகவும் எளிதானது. எனவே, படம் 19 ஐ ஆராய்ந்தால், பள்ளத்தாக்கின் தரையின்மீது அமைந்துள்ள மிக அதிகமான நிலைப்புடனுள்ள 2 அணுக்கருவுடன், அதற்குச் சற்றுமேல் அமைந்துள்ள அதே பொருண்மை எண்ணைக் கொண்ட பிற "இருமடங்கு இரட்டை' அணுக்கருக்களும் நிலைப்புடன் இருக்கக்கூடும்; ஆல்ை, வளைவரையின் மேற்பகுதியில் அமைக்கப்பெற்றுள்ள எல்லா இருமடங்கு ஒற்றை அணுக் கருக்களும் நிலைப்புடைமையற்றுள்ளன. மற்றும் படம் 19இல் மாற்றம் அடையக்கூடிய சந்தர்ப்பங்கள் அம்புக்குறிகளா லும் காட்டப்பெற்றுள்ளன. வலது கீழ்ப் புறத்தை நோக்கியுள்ள அம்புக்குறிகள் பாசிட்ரான்கள் வெளிவிடுதலை (ஒரு சிலவற்றில், ஒரு K கதிர் வீசலைக்) குறிப்பிடுகின்றன. ஆனல், இடப்புறத்தில் இருப்பவை எலக்ட்ரான்கள் வெளி விடுதலைக் குறிப்பிடுகின்றன. எனவே, கீழ்வளைவரையில் பொருத்தமான நிலைப்புடனுள்ள அணுக்கருக்கள் இருந்தால், மேல்வளைவரையில் அமைந்துள்ள நிலைப்புடைமையற்ற அணுக்கருக்கள் இரண்டு செயலாலும் மாற்றம் அடையலாம். பொட்டாசியம் அணுக்கரு (,K') இதற்கு ஓர் எடுத்துக் காட்டு:இஃது எலக்ட்ரானை வெளிவிட்டு கால்சியம் அணுக்கரு வாகவோ (Ca"), அல்லது பாசிட்ரானை வெளிவிட்டு ஆர்கான் அணுக்கருவாகவோ (A") மாற்றம் அடையக் கூடும். ஆராய்ச்சியால் கண்ட விதிகள்: ஆகவே, இந்த வளைவரைகளால் அடைந்த சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, நாம் அடியிற் கண்ட விதிகளை