பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் 175 உண்டாக்கலாம்; இவை சோதனைகளால் சரிபார்க்கப்பெற வேண்டியவை: 1. பொருண்மை.எண் ஒற்றைப்படை எண்ணுக இருக் சூம்பொழுது-அஃதாவது, ஒற்றை அணுக் கருக்களில் - ஒரு குறிப்பிட்ட பொருண்மை-எண்ணுக்கு ஒரே ஒரு நிலையான அணுக்கருதான் உண்டு. மற்றவை யாவும் நிலைப்புடைமை யற்றவை. அவை எலக்ட்ரான்களையோ அல்லது பாசிட்ரான் களையோ வெளிவிடும் (அல்லது K சிறையீட்டால் சிதைந் தழியும்). 2. பொருண்மை-எண்ணும் நியூட்ரான்களின் எண்ணிக் கையும் புரோட்டான்களின் எண்ணிக்கையும் இரட்டைப் படை எண்ணுக இருக்கும்பொழுது-அஃதாவது இரு மடங்கு இரட்டை' அணுக்கருக்களில்-ஒரே பொருண்மை எண்ணைக் கொண்ட பல நிலைப்புடைய-மிகப் பல அன்று (இரண்டு அல்லது மூன்று எனக் கொள்க.)-அணுக்கருக்கள் உள்ளன. 3. இரட்டைப் படைப் பொருண்மை - எண்ணையும், ஆனல் ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள புரோட்டான்களை யும் ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களையும் கொண்ட நிலைப்புடைய அணுக்கருக்கள்--இரு மடங்கு ஒற்றை அணுக்கருக்கள்-பொதுவாக இருக்கவே முடியாது. எனினும், மூன்ருவது விதியில் குறிப்பிட்டதற்கு விதி விலக்காக, மிக இலேசான அணுக்கருக்களில் சில அணுக்கருக் களும் உள்ளன. இரண்டு வளைவரைகளிலும் தெளிவாக வளைநிலையில் (Sharp flexure) இருப்பதற்கு இவையே காரண மாகும்; இந்த வளைநிலையின் விளைவாகத்தான் மேல்வளைவரை யின் கிட்டத்தட்ட மிகக் கீழாக உள்ள புள்ளியில் அமைந் திருக்கும் மிக அதிகமான நிலைப்புடனுள்ள அணுக்கரு, கீழ் வளைவரையினை மிகவும் நெருங்கியுள்ள அணுக்கருக்களின் கீழ் உள்ளது.