பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 76 அணுக்கரு பெளதிகம் மட்டாவ் விதி: மேற் குறிப்பிட்ட எல்லா முடிவுகளும் உண்மையனுப வத்தால் பெறப்பட்டவை: அட்டவணை-IV ஐ (நூலின் இறுதியில் உள்ளது) வைத்துக்கொண்டு பார்த்தால் இது தெளிவாகும்; அட்டவணையில் நிலைப்புடனுள்ள அணுக் கருக்கள் கரும் புள்ளிகளாலும், நிலைப்புத்தன்மையற்றவை நிமிர்ந்த முக்கோணங்களாலும் (எலக்ட்ரான்களை வெளி விடுபவை), அல்லது கவிழ்ந்த முக்கோணங்களாலும் (பாசிட் ரான்களை வெளி விடுபவை) குறிப்பிடப்பெற்றுள்ளன. மேலும், இந்த அட்டவணையை மிகக் கவனமாக ஆராய்ந் தால், உண்மையில் மிகச் சில எடுத்துக்காட்டுக்களைத் தவிர. ஒரு குறிப்பிட்ட பொருண்மை - எண்ணில் ஒன்றற்கு மேற் பட்ட நிலைப்புடனுள்ள அணுக்கரு எப்பொழுதுமே இல் வாமை தெரியவரும். இந்தக் கூற்று மட்டாவ் விதி' என்று வழங்கப்பெறுகின்றது. இந்த அட்டவணையிலும் ஒரே பொருண்மை-எண்ணேக்கொண்ட அணுக்கள் மட்டா யத்திற்கு 45'-இல் ஏறிய நிலையிலுள்ள ஒரு நேர்க்கோட்டில் அமைந்திருக்கின்றன. எடுத்துக் காட்டாக, பாலேடிய அணுக்கரு (Pd'), வெள்ளி அணுக்கரு (Ag), காட்மிய அணுக்கரு (Cd'), இண்டிய அணுக்கரு (In')ஆகியவை யாவும் அத்தகைய ஒரு நேர்க்கோட்டில் அமைந் துள்ளன. இவற்றுள் Cd' மட்டிலும்தான் நிலைப் புடையது: .Pd'வும் Ag'-வும் எலக்ட்ரான்களை வெளி விடுபவை; n' பாசிட்ரானே வெளி விடக்கூட யது. எனவே, ஒற்றுைப்படைப் பொருண்மை - எண்ணே யுடைய நிலைப்புடனுள்ள அணுக்கருவினைக்கொண்ட அதே நேர்க்கோட்டில் அதே பொருண்மை - எண்ணைக் கொண்ட பிற அணுக்கருக்கள் யாவும் நிலைப்புடைமையற்றவைகளாக உள்ளன என்ற மெய்ம்மையை இந்த அட்டவணை முற்றிலும் 8. Lou’l-fréis so—Mattauch's rule