பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.78 அணுக்கரு பெளதிகம் புடனுள்ள ஐசோடோப்புக்களைப் பெற்றுள்ளன. எனவே டைட்டேனியம் என்ற தனிமம் அதனுடைய இரட்டைப் படை எண்ணிக்கைப் புரோட்டான்களுடன் (22) நிலைப்புட னுள்ள ஐந்து ஐசோடோப்புக்களைப் பெற்றுள்ளது. ஆளுல், அதன் அயலவனுகவுள்ள (Neighbour) வேனேடியம் என்ற தனிமம் அதனுடைய 28 புரோட்டான்களுடன் ஒரே ஒரு ஐசோடோப்பையே பெற்றுள்ளது. அடுத்த தனிமமாகிய குரோமியம் நான்கு ஐசோடோப்புக்களைப் பெற்றுள்ளது. ஆளுல், அதனை உடன் அடுத்து வரும் மாங்கனிஸ் ஒர் ஐசோ டோப்பினை மட்டிலுமே பெற்றுள்ளது. காட்மியம் 48 புரோட்டான்களுடன் எட்டு நிலைப்புடைமையுள்ள ஐசோ டோப்புக்களைப் பெற்றுள்ளது. ஆனால், அதை அடுத்துத் தொடரும் வெள்ளி (Z = 47) இரண்டே ஐசோடோப்புக் களைப் பெற்றுள்ளது. ஆவர்த்த அட்டவணை முழுவதிலும் இதே நிலைதான் காணப்பெறுகின்றது. அணுக்கரு விசைகளின் இயல்பைப்பற்றி, அதிலும் சிறப் பாக அவற்றின் குறுகிய வீச்சையும் நிறைவு பெறும் திறனை யும்பற்றி, ஏற்கெனவே ஆராயப்பெற்ற சங்கற்பங்கள் முடிவு களின் மூலம் உண்மை அனுபவத்தால் திட்டமாக உறுதிப் படுத்தப்பெறுகின்றன. ஐசோடோப்புக்களின் இருப்பிற்கு ஓர் எளிய விளக்கம்: பல்வேறு தனிமங்களின் ஐசோடோப்புக்களின் இருப் பைப்பற்றிய வெளியீடு, இதுகாறும் நாம் அறிந்த அணுஎடைகள் யாவும் முழு எண்களாகவே உள்ளன என்ற சங்கற் பத்தின் அடிப்படையில் அமைந்த பிரெளட்டின் கருதுகோள்இது ஒரளவுச் சரியான வழியில் செல்லும் இயக்கமாக இருந் தது-கிட்டத்தட்ட ஒரு நூற்ரு ண்டாக மறதிக் கடலில் ஆழ்ந்து கிடந்தமைக்கு ஒரு விளக்கமாக அமைகின்றது. அதன் பிறகு மேற்கொண்ட பளுவான தனிமங்களின் அணு