பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அணுக்கரு இயக்கங்கள் (1) ஆல்பாக் கதிர்வீசல் அணுக்கரு மாற்றம்-ஆராய்ச்சி இதற்கு முன் நடைபெற்ற சொற்பொழிவுகளில் அணுக் கருக்களின் மாற்றங்களைப்பற்றி அதிகம் சொல்லப்பெற்றுள் ளது. இத்தகைய மாற்றங்களில் ஒரு வேதியியல் தனிமம் பிறி தொரு தனிமமாக மாறுகின்றது; இந்த முறையில் நவீன அணுக்கரு பெளதிகம் ஒரளவு பண்டைய இரச வாதிகளின் நம்பிக்கைகளே உண்மையாக்கியுள்ளது. இப்பொழுது நாம் இந்த அணுக்கரு உரு"மாற்றங்களை மிகவும் ஊன்றி ஆராய் வோம். இவ்விடத்தில் அடியிற்காணும் இரண்டு விளுக்கள் எழுகின்றன: எந்தத் தனிமங்கள் ஒன்று பிறிதொன்ருக மாற்றப்பெறுதல் கூடும்? எந்த நிபந்தனைகளின்கீழ் அத் தகைய ஒர் உருமாற்றம் சாத்தியப்படுதல்கூடும்? இந்த இரண்டு வினுக்களுக்கும் விடையிறுப்பதற்காக உருமாற்றச் செயல்களை இரண்டு தொகுதிகளாக இனப்படுத்திக் கொள் வோம்: முதலாவது, தாமாக நடைபெறும் இயக்கங்கள்; இரண்டாவது, புற ஏற்பாடுகளால் உண்டாக்கப்பெறும் இயக்கங்கள். தானுக நடைபெறும் மாற்றம்-கதிரியக்கம்: ஒரு தனிமத்தின் தாகை நடைபெறும் மாற்றம் கதிரியக்கம் (Radioactivity) என வழங்கப்பெறுகின்றது; காரணம், அச் செயல் கதிர்வீசல் வெளிப்படுதலுடன் சேர்ந்து தடைபெறு