பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் I 81 கின்றது. கதிரியக்கத் தனிமங்கள் ஆல்பாக் கதிர்வீசலை வெளிவிடுபவை, பீட்டாக் கதிர்வீசலை எலக்ட்ரான்கள் அல்லது பாசிட்ரான்கள்) வெளிவிடுபவை என இரண்டு இனங்களாக உட்பிரிவு செய்யப்பெறலாம். காமாக்கதிர் வீசல் அதே சமயத்தில் நடைபெறக்கூடும். இவற்றுடன், வேறு சில செயல்களும் உள்ளன; அவை பின்னர் ஆராயப் பெறும். ஆல்பாக் கதிர்களை வெளியிடுபவை: ஆல்பாக் கதிர்கள் வெளியிடப்பெறும் உருமாற்றச் G#usvsaflsstaðshgi (Transmutation processes) 5th gyfririirist யைத் தொடங்குவோம். ஆல்பாக் கதிர்வீசவில் ஹீலிய அணுக் கருக்கள் அடங்கியுள்ளன; ஒவ்வொரு ஹீலிய அணுக் கருவும் இரண்டு நியூட்ரான்களாலும் இரண்டு புரோட்டான் களாலும் ஆனது. ஆல்பாக் கதிர்வீசல் வெளியிடப்பெறு வதை எப்பொழுது எதிர்பார்க்கலாம் என்பதை நாம் ஏற். கெனவே ஆராய்ந்துள்ளோம். கிட்டத்தட்ட துத்தநாகம் (30) என்ற தனிமத்தில் தொடங்கி, மின்-நிலைப்பொருளியல் sosué@5 of softain (Electrostatic forces of repulsion) so கரிக்கும் உறைப்பின் காரணமாக ஒவ்வொரு துகளின் பிணைப் பாற்றலும் துகள்களின் எண்ணிக்கை ஏற்றத்திற் கேற்ற வாறு குறைகின்றது. ஆகவே, ஆற்றலியலைப் (Energetics) பொறுத்தவரை, பளுவான தனிமங்களால் வெளியிடப் பெறும் ஒர் ஆல்பாத் துகள் சில சந்தர்ப்பங்களில் பயன் விளைவிப்பதாக இருக்கலாம். இது நேரிடும்பொழுது, தொடக்கத்திலிருக்கும் அணுக்கருவிற்கும் செயலின் விளை பொருளாகத் தோன்றும் அணுக்கருவிற்கும் இடையேயுள்ள பொருண்மைக்குறையின் (Mass defect) வேற்றுமையிலிருந்து ஆல்பாத் துகளின் ஆற்றலும் அதன் வீச்சும் (Range) அறுதி யிடப் பெறுகின்றன. எனவே, ஒரு திட்டமான சிதைந்தழி யும் செயலின் விளை பொருளாகத் தோன்றும் எல்லா ஆல் பாத்துகள்களும் ஒரே வீச்சினையே பெற்றுள்ளன (படம் - 3).