பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 88 அணுக்கரு பெளதிகம் குறைகின்றது. நிலையாற்றலில் ஏற்படும் இந்த மாற்றம் படம் - 21 இல் வளைவரையால் காட்டப்பெற்றுள்ளது. ஆல்பாத் துகள் அணுக்கருவினின்றும் வெளிநோக்கி வீசி யெறியப்பெறுங்கால், அஃது இந்த நிலைப்புவீச்சினுள்ளும்(Pot ential range) செல்லுகின்றது; இதில் வீச்சினைக் கடத்து உள்ளி ருந்துவெளியே செல்கின்றது. அஃது அணுக்கருவிலிருந்து அதிக அளவு இயக்க ஆற்றலுடன் அதிக தூரத்தைக் கடந்து செல் லுவதால், அந்தச் சமயத்தில் அதன் மொத்த ஆற்றல் ஒரு நேர் அளவாகவே உள்ளது. காரணம், அதன் நிலையாற்றல் மறைகின்றது. படம்-21இல் அந்தமெய்ம்மை இரண்டுகிடைக் கோடுகளால் (Horizontal lines) குறிப்பிடப்பெறுகின்றது; அவற்றுள் ஒரு கோடு நீண்ட ஆயுளைக்கொண்ட யுரேனியத் தின் மெதுவாகச்செல்லும்ஆல்பாத் துகள்களையும், மற்ருென்று மிகவும் குறுகிய ஆயுளைடைய தோரியம் c யினுடைய விரைந்து செல்லும் ஆல்பாத் துகள்களையும் காட்டுகின்றன; அணுக்கருவினின்று ஆல்பாத் துகள் வெளிவரும்பொழுது இந்த ஆற்றலைத் தன்னுடன் சுமந்து செல்வதால், அஃது அணுக்கருவினுள் இருக்கும்பொழுதும் அந்த ஆற்றலைப் பெற்றிருக்கவேண்டும். ஆகவே, யுரேனியத்தின் நேர்க் கோட்டை அணுக்கருவின் உட்புறம் வரையிலும் நீட்டுகின் ருேம். அணுக்கருவின் உட்புறம் உள்ள இயக்க ஆற்றல் இன் னும் அதிகமாக இருந்தது என்பது வெளிப்படை, ஒரு குறிப் பிட்ட புள்ளியில் அதன் மதிப்பு நிலையாற்றல் வளைவரையி லிருந்து ஒரு நேர்க்கிடைக்கோட்டின் பிரிப்பினல் குறிப்பிடப் பெறுகின்றது. உட்புறத்தில் இத்துகள் இங்கும் அங்குமாக அதிர்வடைகின்றது என்று, இந்தப் படம் தெரிவிக்கின்றது. அத்துகள் மின்அழுத்தக்கொள்கலத்தின் (Potential container) ஒரு பக்கத்திலிருந்து மற்ருெரு பக்கத்திற்கு முன்னும் பின்னு மாகத் தாவிக் குதிக்கின்றது என்றும் நாம் சொல்லலாம். நேர்க்கோட்டால் காட்டப்பெறும் உட்புறத்திலுள்ள ஆற் றல் எப்பொழுதும் அதன் இயக்க ஆற்றல், நிலை ஆற்றல் களின் மொத்தக் கூட்டுத்தொகையாகவே இருக்கும்.