பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் i & 9 முதல் கண்ணுேட்டப் பார்வையிலேயே இந்தத் துகள் எவ்வாறு அணுக்கருவினின்றும் வெளிபடக்கூடும் என்பதைத் தெளிவாகக் காணுதல் சாத்தியப்படாததாகத் தோன்று கின்றது. ஏனெனில், சாதாரணமான பொறிநுட்பவியல் கருத்துக்களின்படி , மின் அழுத்தக் கொள்கலனின் பக்கங் களைத் தூண்டி வெளிப்புறமாக அதனுல் சிறிதும் நகர்ந்து செல்ல இயலாது; காரணம், நேர்க்கோடு மின் அழுத்த வளை வரையைக் குறுக்கிடும் இடத்தில், இயக்க ஆற்றல் மறை கின்றது: அஃதாவது, துகள் அமைதி நிலையை அடைகின் றது. வெளிப்புற இடத்திலிருந்து உட்புறத்தைப் பிரிக்கும் ußsör SG955 AU åMé (Potential barrier) st-55 Q4 évau தற்கு அதனிடம் அடங்கியுள்ள ஆற்றல் துணை செய்யாது. எனவே, சம்பிரதாயமான பொறிநுட்ப வியலின்படி, சிதைந் தழியும் இயக்கம் நடைபெறவே முடியாது. மின் அழுத்த அரண் அணுக்கருவின் நிலைப்புடைமைக்கு உறுதியளிக்கக் கூடியதாக இருக்கும். ஆயினும், அணுக்கரு அவற்றைப் போலவே இயக்க நிலையிலுள்ள வேறு துகள்களையும் கொண் டிருக்கலாம் என்றும், இந்தத் துகள்கள் ஆல்பாத் துகளுக்கு ஆற்றலை மாற்றி அது மின் அழுத்த அரணைக் கடந்து செல்வதற்குத் துணை செய்யக்கூடும் என்றும் ஊகிக்க இடம் உண்டு. ஆனால், அணுக்கரு கிளர்ச்சியுற்ற நிலையிலிருக்கும் பொழுதுதான்-அஃதாவது, அது மிகுதிப்படியான ஆற் றலைப் பெற்றிருக்கும்பொழுதுதான்-இது நிகழ்தல்கூடும்: அனுவின் சாதாரண நிலையில் (Normal state), அத்தகைய மிகுதிப்படியான சுதந்திர ஆற்றல் கிடைப்பதில்லை. ஏனெனில், துகள்கள் இன்னும் கொண்டுள்ள ஆற்றல்உறுதிப்பாடின்மை விதியின்படி-பூச்சிய - நிலை ஆற்றலாகும். இந்த ஆற்றலைப் பயன்படுத்தவும் முடியாது: அன்றி அதன. வேறு துகள்களுக்கு மாற்றிக்கொள்ளவும் முடியாது. அலைப் பொறி வகையியலின் துணை: இங்குத்தான் அகலப்பொறியியல் (Wave mechanics)நமக் குத் துணையாக வந்து அமைகின்றது. ஆல்பாத் துகள்களின்