பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 1.93 துகள்-கூறுமொழியிலும் மேற்கூறிய நிகழ்ச்சியின் விளக்கம்: இனி, அலைக்கூறின் மொழியில் கூறிய விவரம் துகள். கூறின் மொழியில் திரும்பவும் மொழி பெயர்க்கப்பெறுதல் வேண்டும். இவ்வாறு செய்வதில், நாம் அணுக் கருவின் புறத்தமைப்பினுள் அமைந்துள்ள நிலைமைகளை ஆராய்ந்த பொழுது நாம் அலைப்பொருளின் செறிவு நாம் ஆராயும் காலத்தில் தாக்குறும் ஆல்பாத் துகள்களின் அளவின் ஏற்படு நிலையை உண்டாக்குகின்றது என்று உரைத்ததை நினைவில் கொள்ள வேண்டும். ஆனல், அணுக்கருவின் வெளிப் புறத் தில் இந்தச் செறிவு-ஆகவே, அணுக்கருவின் வெளிப்புறத் தில் ஆல்பாத் துகள்களைக் கண்டறிவதன் ஏற்படு நிலை-ஆற் றல் மிகுந்துள்ள துகளை நாம் கையாளும்பொழுது வேகமாக அதிகரிக்கின்றது; நம்முடைய துகளின் ஆற்றல் குறைவாக உள்ளபொழுது மிக மெதுவாக அதிகமாகின்றது. ஒரு துகளின் ஆற்றல் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக உள் ளதோ, அவ்வளவுக்கவ்வளவு அஃது உட்புறத்தில் காணப் படாமலும், ஆளுல் வெளிப்புறத்தில் காணப்படுதலும் ஆகிய ஏற்படு நிலையை அதிகமாகப் பெறுகின்றன; அஃதாவது. மிகக் குறுகிய கால அளவிற்குள் அது வெளிப்புறத்தில் வீசி யெறியப்பெறுகின்றது. ஆற்றல் குறைவாகவுள்ள ஆல் பாத் துகள்களிடம் இருப்பதைவிட ஆற்றல் அதிகமாகவுள்ள ஆல்பாத் துகள்களிடம் சிதைந்தழியும் ஏற்படுநிலை மிக அதிக மாக இருப்பதன் மெய்ம்மைக்கு விளக்கம் காண்கின்ருேம். இந்தக் கருத்தினைக் குறிப்பிடும் கணிதக் கோவை கைகர் . நட்டாவின் விதியுடன் திருப்திகரமாக இணைகின்றது. குடை வழி விளைவு: நாம் துகள்-கூறின் மொழியில் சற்றுமுன்னர் ஆராய்ந்த விாேவின் விவரத்தின் சுருக்கத்தைக் கூற விரும்பிளுல், ஆற் றல் அழியா விதியின் அடிப்படையில் நாம் எதிர்பார்ப்பவை அ-13