பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 94 அணுக்கரு பெளதிகம் களுக்கு மாருக, ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குப் பிறகு (அக்கால எல்லேயின் நீட்டம் தற்செயலாக ஏற்படுவதே) அத்துகள் ஒரு குடைவழி வழியாக வெளிப்படுவதுபோல மின் அழுத்த அரணைத் தகர்த்துக் கொண்டு வெளிவர முடி கின்றது. ஆகவே, இன்று குடைவழி விளைவு' (Tunnel effect) என்று பேசுவது வழக்கமாகி விட்டது. பளுவான தனிமங்களிடம் மட்டிலுமே சிதைந்தழிதல் காணப்பெறுதல்: ஆவர்த்த அட்டவணையில் துத்தநாகத்திற்கு மேலுள்ள எல்லாத் தனிமங்களும் ஆல்பாச் சிதைந்தழியும் நிலையில் உள்ளன என்று எதிர்பார்க்கப்பெற்றபோதிலும், இந்தச் சிதைந்தழிதல் மிகப் பளுவான தனிமங்களிடம் மட்டிலுமே காணப்படத்தக்கதாக உள்ளது. நாம் நன்கு அறிந்த, ஆல் பாக் கதிர்களை வெளிவிடும் தனிமங்களுக்கும் ஆற்றலியலைப் பொறுத்தவரை ஆல்பாக் கதிர்வீசலை வெளிவிடுவதற்குத் தகுந்ததாகவுள்ள தனிமங்களுக்கும் இடையில் தெளிவாகப் பிரிவு செய்து காட்டக்கூடிய கோடு ஒன்று இல்லை என்பதை ஊகிப்பது காரண காரிய முறைக்குப் பொருத்தமாக இருக் கும். ஆனல், அவ்வாறு இருப்பது ஒரு பொழுதும் அறியப் பெறவில்லை. ஆவர்த்த அட்டவணையில் துத்தநாகத்திற்கு மேலுள்ள தனிமங்களில் பெரும்பாலானவை உண்மையில் ஆல்பாக் கதிர்களை வெளிவிடுதல் சாத்தியமாகலாம்; ஆல்ை, இந்தத் துகள்களின் ஆற்றலும் வீச்சும் மிகச் சிறியனவாகவே உள்ளன. இந்த இரண்டு கூறுகளும் நாம் நடைமுறையில் அவற்றை உற்று நோக்க இயலாமையை மிக நன்ருக விளக்கு கின்றன. எனினும், அத்தகைய கதிரியக்கம் பெரும்பாலும் நமக்குப் புலஞ்வதில்லை; காரணம், ஆற்றலின் குறைந்த அளவு மிகக் குறைந்த தன்மையுடனுள்ள சிதைந்தழிதல் ஏற்படு நிலையுடன் (Decay probability) பொருந்துவதாக உள்ளது. ஏனெனில், அத்தகைய ஒரு தனிமம் அடிக்கடி நிகழாத இடைநேரங்களில் ஒர் ஆல்பாத் துகளி ைவெளி