பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 專9壽 விடலாம் என்றிருந்தபோதிலும், அஃது இவ்வண்டத்திற் குரிய கால அளவுகளால் அளந்தாலும் (Cosmical time standards) கூட, அஃது எல்லா நடைமுறைச் செயல்களுக்கும் நிலைப்புடைமையுடனேயே உள்ளன. (II) பீட்டாக்கதிர்களை வெளி விடுபவை தாமாக உரு மாற்றம் அடைபவை-பீட்டாக்கதிர்களை வெளி விடுபவை: இனி, நாம் தாமாக உருமாற்றம் அடையும் இரண் டாவது வகை அணுக்கருக்களில் நம் கவனத்தைச் செலுத்து வோம். இந்த மாற்றம் பீட்டாக் கதிர் வீசலுடன் நடை பெறுகின்றது: அஃதாவது, நியூட்ரினேவுடன் சேர்ந்து எலக்ட்ரான்கள் அல்லது பாசிட்ரான்கள் வெளிவிடப் பெறு கின்றன. இத்தகைய உருமாற்றங்கள் ஆற்றல் அழியா விதிகளுடன் பொருந்துவதாக இருக்கும்பொழுது, அதிலும் சிறப்பாக அச்செயலில் அணுக்கருவினின்றும் ஆற்றல் வெளி விடப்பெறும்பொழுது, அவை நிகழ்கின்றன. இங்கும், மாற்றம் அடைவதற்கு முன்கூட்டித் தேவையானவை யாவும் இருக்கும்பொழுதுக்ட ஏன் ஒர் அணுக்கரு உடனே உரு மாற்றம் அடைவதில்லை என்ற வின எழுகின்றது. குறுகிய ஆயுளை உடையவை: பீட்டாக் கதிர்களை வெளிவிடும் தனிமங்களுக்கிடையே யுள்ள ஆயுட்காலங்களின் வேற்றுமைகள் ஆல்பாக் கதிர்களை வெளிவிடும் தனிமங்களிடையே காணப்பெறும் ஆயுட் காலங்களின் வேற்றுமைகளேவிடச் சிறியனவாகவே உள்ளன. பீட்டாக் கதிர்களை வெளிவிடும் தனிமங்களின் அரை-வாழ்வு கள் ஒரு சில விடிைகளிலிருந்து ஒரு சில ஆண்டுகள்வரை யிலும் மாறுகின்றன. அவற்றுள் மிகச் சில தனிமங்களே நீண்ட அரை-வாழ்வைப்பெற்றுள்ளன.